Friday, November 13, 2009

காதல் துளிகள்


காதல் செய்தல் பாவம்
சொல்கிறது உலகம்....
எனவே,

உன்னையே வட்டமிட்டு என்னைக் கொன்று விடும் திட்டத்தோடிருக்கும்
என் எண்ணங்களிடமிருந்து தப்பிக்க
வானவில் ஏறி ஒளிந்து கொண்டேன் மேகங்களுக்குள்..
சற்றே நேரத்தில் நிலவின் ஒளியாய் வந்து
உன்னுள் என்னையோ
என்னுள் உன்னையோ
புதைத்து போனது உன் நினைவு
இது மேகத்தை மூடி விட்ட நிலா


உனக்கான நேசமே என் சுவாசமாகி விட்டதால்
மூச்சை இருக்கிக் கொண்டு
ஒளிந்து கொண்டேன் ஆழ்கடலின் அடியில்....
பெரியதாய் ஒரு ஞாபக அலை வந்து
விட்டுச் சென்றது என்னை
நீ இருக்கிற கரையினில் ....


வேண்டாத வேட்கை வேண்டாமென
வேற்றுகிரகத்தில் குடியேறினேன்
அங்கும் நட்சத்திரமாய் மின்னியது உன் நினைவு


உலகின் ஒவ்வொரு எல்லையிலும்
ஒளியாய்
காற்றாய்
உணர்வாய்
நீயிருந்தாய்!

முயற்சிகள் முற்றுப் பெற கூடாதென
வானிற்கு அப்பாலுக்கும் அப்பாலாய்
கடவுளுக்கருகில் நான் மட்டும் தனித்திருந்தேன்
அங்கோ
நானாய் நீ இருந்தாய்


எல்லாவற்றிலும் தோற்று
களைத்து நான் சாய்கையிலே..
இதமாய் எதோ ஒன்று உணர்ந்தேன்

உன் சுவாசத்திலே நான் இருந்தேன்
இதழோரம் புன்னகையோடு நின்றிருந்தாய் நீ
என் இதயத்தின் பக்கத்தில்......



9 comments:

jgmlanka said...

"உன் சுவாசத்திலே நான் இருந்தேன்
இதழோரம் புன்னகையோடு நின்றிருந்தாய் நீ
என் இதயத்தின் பக்கத்தில்......"
நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

மேகத்தை மூடி விட்ட நிலா - இதயத்தை தொட்டுப் போன கவிதை

அகல்விளக்கு said...

//உனக்கான நேசமே என் சுவாசமாகி விட்டதால்
மூச்சை இருக்கிக் கொண்டு
ஒளிந்து கொண்டேன் ஆழ்கடலின் அடியில்....
பெரியதாய் ஒரு ஞாபக அலை வந்து
விட்டுச் சென்றது என்னை
நீ இருக்கிற கரையினில் ....//

நான் அதிகம் ரசித்த வரிகள்...

சிந்தனைச்சிறகுகளை விரிய வைத்திருக்கிறது.

Newman said...

அருமையான கவிதை

kavya said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பூங்கோதை,ரிஷபன்,அகல்விளக்கு,நெல்லை பைலட்.

CS. Mohan Kumar said...

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

எனது பதிவுக்கு இன்று தாங்கள் அளித்த வாக்கை வைத்து தங்கள் பதிவுக்கு வந்தேன். நன்றி

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

Mohan R said...

உன்னையே வட்டமிட்டு என்னைக் கொன்று விடும் திட்டத்தோடிருக்கும்
என் எண்ணங்களிடமிருந்து தப்பிக்க

Nice lines

kavya said...

நன்றி mohan kumar & mohan

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க.