"கவிதா இன்னிக்கு சாயுங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருமா.. நேத்து சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல.. மாப்ள வீட்ல இருந்து உன்ன பாக்க வர்றாங்க" .. காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டு ஆபீஸ் கிளம்புவதுற்குள் ஐந்தாவது முறையாக அம்மா ஞாபகப்படுதினாள். "சரிம்மா.. எத்தன தடவ சொல்லுவ.. வந்துடுறேன்.." என்றபடி செருப்பை மாட்டுகையில் அப்பாவின் தொலைபேசி உரையாடல் கேட்டது."முப்பது பவுன் தான் முடியும்னு தெளிவா சொல்லி கூட்டிட்டு வாங்க... பொண்ணு பேங்க் ல வேல பாக்குறா... சும்மா இல்ல..". கவிதாவுக்கு ஒரு தேசிய வங்கியில் க்ளெர்க் வேலை.மேலும் அந்த உரையாடலை நின்று கவனிப்பதற்கு கவிதாவுக்கு நேரமும் இல்லை,ஆர்வமும் இல்லை.யோசனையோடு நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். "who is your idol?"பத்தாம் வகுப்பில் ஒரு முறை ஆசிரியை கேட்டது நினைவிற்கு வந்தது.கல்பனா சாவ்லா ..இது இவளின் பதில்.. இந்திரா காந்தி ,அருந்ததி ராய் என புரட்சி மங்கைகளின் மீது பெரிய மரியாதையும் அவர்களை போல் அவர்களை விட அரிய சாதனைகளையும் படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் அது.அறியா பருவம் !!ம்ம்ம்ம்... கல்லூரியில் பி எஸ்சி முடித்து விட்டு வீட்டில் இருந்த நேரத்தில் பக்கத்து வீட்டு மாமியின் அறிவுரையின் பேரில் முதல் முறையாக பக்கத்தில் இருந்த மெட்ரிக் பள்ளியில் டீச்சர் வேலைக்கு இண்டர்வியுவிறகு registration லயனில் தனக்கு முன் நின்றிருந்தவர்களை எண்ணி பார்த்து எண்ணிக்கை அறுபதை தாண்டிய பொழுது தான் முதன் முதலாய் லேசாய் பயம் வந்தது ...வேலை கிடைப்பது அத்தனை சுலபமில்லையோ.. முட்டி மோதி எட்டையும் நாலையும் வேகமாய் பெருக்குவதற்கு பல சுலப வழிகளை கற்றுக் கொண்டு இந்த வங்கியில் வேலை வாங்கி விட்ட போது லேசாய் வானத்தை தொட்டது போலவே இருந்தது என்றாலும் கொஞ்ச நாளிலேயே ஒன்னையும் ஒன்னையும் கூட்டி ரெண்டு எனச் சொல்லும் இந்த வேலை தனது லட்சியம் இல்லை என்பது அவளுக்கு புரிந்தது.ஆனால் அவளை தவிர வீட்டில் எல்லோருக்கும் சகல திருப்தி.9 to 5 job.வேலை ல பிரஷர் ஒன்னும் இல்ல.நாங்க ரொம்ப happy. ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணா என் பொண்ணு .வந்தவர்களிடம் எல்லாம் பூரித்து போனார் அப்பா.நான் விரும்புவது இது இல்லை.எனக்கு வேலையில் ஒரு சவால் வேண்டும்.ஒரு இது வேண்டும்..அந்த இது ,எது என்று தெரியாததாலேயே தான் இன்னும் அந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பதை தோன்றியது அவளுக்கு.பேருந்து வந்தது.ஏறி அமர்ந்து கொண்டாள்.மாலையில் வரப் போகிறவன் எப்படி இருப்பானோ....அடுத்த நிறுத்தத்தில் ஒரு புது மண தம்பதி ஏரிநர்.கவிதாவுக்கு திடீரென மது ஞாபகத்துக்கு வந்தான்.அவனை பற்றி நினைக்கையில் எல்லாம் ,பனி துளியோடு இருக்கும் மலரை பார்ப்பது போல இருக்கும் அவளுக்கு.ஏழு வருடங்களுக்கு மேலாக அவனைத் தெரியும்.அவனை பிடிக்கும். ஆனால் அம்மா,அப்பா,அண்ணன்,லக்ஷ்மி ,செல்ல நாய் குட்டி எவர்களை எல்லாம் பிடித்திருப்பதை போல் அல்ல.இதில் ஏதோ ஒரு வித்தியாசம் உண்டு.இவனிடம் ஏதோ ஒரு excitement factor உள்ளது.ஏழு ஆண்டுகள் ஆகியும் குறையாமல் உள்ளது.எப்பொழுது திருமண பேச்சு எழுந்தாலும் இவன் பற்றிய நினைவுகள் ஏன் நெருடுகின்றன.இது தான் காதலோ?எச்சில் விழுங்க சிரமமாய் இருந்தது.நேற்று தொலைக்காட்சியில் ஆசை திரைப்படம்..."143 தெரியாதா...அப்பிடினா i love you னு அர்த்தம்" ....என்னடி படம் அது .. நல்லதா எதுவாது போடுடி.அம்மாவின் சத்தம் உள்ளிருந்து... சம்பந்தம் இல்லாமல் இப்போது அது நினைவுக்கு வந்தது.பின் சம்பந்தத்தோடு தான் வந்திருப்பது புரிந்தது.இதெல்லாம் சரி பட்டு வராது.ஜன்னலின் பக்கம் பார்வையை ஓட விட்டாள்.மாலை வரப் போகிறவன் கூட ஏதோ ஒரு மதுமிதாவை நினைத்துக் கொண்டு என்னை பார்க்கலாம்.சிரிப்பு வந்தது.கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அண்ணனுக்கு திருமணம் நடந்தது.அண்ணியை பார்ப்பதற்கு முதல் நாள் ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்த்து கொண்டிருக்கும் போது அண்ணனிடம் கேட்டு பார்த்தேன் அண்ணி எப்படி இருக்க வேணுமென்று நினைக்கிறாய் என.அவன் சொன்னான்.. வீட்ல எல்லாருக்கும் புடிச்சு இருந்தா சரி.எப்படி தான் உன்னால இப்டி இருக்க முடியுதோ தெரியலடா.எனக்கெல்லாம் ராகுல் காந்தி மாதிரி கலரா சூப்பரா இல்லனாலும் இந்த மகேந்திர சிங்க் டோனி ரேஞ்லயாவது இருக்கணும்.நினைத்து பார்க்கும் போது வாய் விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.வரப் போகிறவனுக்கு கிரிக்கெட் தெரியுமோ என்னவோ.. சே
இந்தியாவில் கிரிக்கெட் தெரியாமல் ஒரு சாப்ட்வேர் engineer இருப்பானா.. அது சரி.. குடும்பம் நடத்துவதற்கு கிரிக்கெட் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லையே... மேம்போக்காய் நினைத்து பார்க்கையில் எல்லாம் சரியாய் போய்க் கொண்டிருப்பதாய் தெரிந்தாலும் எங்கோ உள்ளே சுயத்தை இழப்பது போல் இருந்தது.இது தானே சராசரி வாழ்க்கை.எதிர்பார்காதது நானும் ஒரு சராசரி வாழ்க்கையைத் தான் வாழ போகிறேன் என்பதைத் தான்.என் நிறுத்தம் வந்தது இறங்கிக் கொண்டேன்.
மாலையும் வந்தது.அவரும் வந்திருந்தார்.இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு அவரை பார்த்தேன்.நல்ல பிள்ளையாக அவரின் தந்தைக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு என் வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டுள்ள என் பாட்டி தாத்தாகளின் படங்களை உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.என்னையும் அறியாமல் வாய் விட்டு சிரித்து விட்டேன்.அண்ணன் சொன்னான் மெதுவா கவி... அவர் எதாவது பேச வேண்டுமென்றால் அவரை பேச விடு.ரொம்ப வாய் பேசாதே.சரி என்றேன்.அவர் பேசவேண்டுமென்று சொல்வார் என தோன்றவில்லை.30 பவுனுக்கு மேல் ஒன்றோ இரண்டோ என் தந்தையிடம் பேரம் வாங்கிக் கொண்டு என்னையும் கொண்டு போக வந்திருப்பவன் என எனக்கு தோன்றியது.அவனை பார்க்க இஷ்டமில்லாமல் போனது.அறைக்குள் வந்தாள் அம்மா.அண்ணன் கேட்டான் என்னமா ஒத்து வர மாட்டாங்க போல இருக்குதே.அம்மா சொன்னாள்.. சராசரியா நடக்கிறது தான.. எல்லாம் சரிப்பட்டு வரும்.வாழ்க்கை அத்தனை சுலபமில்லை என தோன்றியது.ஜன்னல் வழியே பார்த்தேன் ... ஒரு நட்சத்திரம் மின்னிக் கொண்டிருந்தது...கல்பனா சாவ்லவாக இருக்கும் என் எண்ணி கொண்டேன்....
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இந்திரா காந்தி ,அருந்ததி ராய் என புரட்சி மங்கைகளின் மீது பெரிய மரியாதையும் அவர்களை போல் அவர்களை விட அரிய சாதனைகளையும் படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் அது.அறியா பருவம் !!ம்ம்ம்ம்... கல்லூரியில் பி எஸ்சி முடித்து விட்டு வீட்டில் இருந்த நேரத்தில் பக்கத்து வீட்டு மாமியின் அறிவுரையின் பேரில் முதல் முறையாக பக்கத்தில் இருந்த மெட்ரிக் பள்ளியில் டீச்சர் வேலைக்கு இண்டர்வியுவிறகு registration லயனில் தனக்கு முன் நின்றிருந்தவர்களை எண்ணி பார்த்து எண்ணிக்கை அறுபதை தாண்டிய பொழுது தான் முதன் முதலாய் லேசாய் பயம் வந்தது ...
Nice lines... Ippa irukkura ulagathula paathi software engineers irukurathu ithanala thaan :(
கவிதாவுக்கு திடீரென மது ஞாபகத்துக்கு வந்தான்.அவனை பற்றி நினைக்கையில் எல்லாம் ,பனி துளியோடு இருக்கும் மலரை பார்ப்பது போல இருக்கும் அவளுக்கு.ஏழு வருடங்களுக்கு மேலாக அவனைத் தெரியும்.அவனை பிடிக்கும். ஆனால் அம்மா,அப்பா,அண்ணன்,லக்ஷ்மி ,செல்ல நாய் குட்டி எவர்களை எல்லாம் பிடித்திருப்பதை போல் அல்ல.இதில் ஏதோ ஒரு வித்தியாசம் உண்டு.இவனிடம் ஏதோ ஒரு excitement factor உள்ளது.ஏழு ஆண்டுகள் ஆகியும் குறையாமல் உள்ளது.எப்பொழுது திருமண பேச்சு எழுந்தாலும் இவன் பற்றிய நினைவுகள் ஏன் நெருடுகின்றன.இது தான் காதலோ?
Ellarukkum ippadi thaan yaaravadhu oruthanga nyabagam varangala...
SIlar andha oruthangalodaye amanchuduranga...
Silarku andha oruthangaloda nyabagame podhumnu irundhuduranga...
But paava patta Palarku ippadi madhanum madhumitavum nyabagathula irundhalum ithu thaan vaalkaiyunu kaalathoda kadhalayum kadandhuduranga...
ஜன்னல் வழியே பார்த்தேன் ... ஒரு நட்சத்திரம் மின்னிக் கொண்டிருந்தது...கல்பனா சாவ்லவாக இருக்கும் என் எண்ணி கொண்டேன்....
Nice end :)
கமெண்ட்ஸ்க்கு நன்றி மோகன்.உங்கள் கருத்துக்களை படித்த பிறகு உண்மையாகவே சராசரியாக நடப்பவைகளை தான் சொல்லி இருக்கிறேன் என்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது .
Kavya...y u guys think like average....u have only one life to live...live that life to ur passions...u dunno whether u will get another exciting n interesting life like this to pursue ur passions...keep in mind that people whoever have succeeded in their life have pursued their dreams...
So this is ur life...u gonna live that ...if u gonna miss this chance u will regret that in ur older part of life....so be adventurous and take risks in life....
If you dont decide your destiny den others will b allowed to decide that....
very true.. and its inspiring..
நினைவோடை உத்தியில் சரளமாய் கதை படிக்க சுவாரசியம் பிளஸ் இன்னமும் ஜீவித்திருக்கும் சமுதாய உள சிக்கல்கள் பற்றிய பெருமூச்சு கவிதை எழுதுபவர்கள் தான் கதையையும் அழகாக செய்வார்கள் என்கிற என் நம்பிக்கை மறுபடி ஜெயித்து இருக்கிறது
thanks so much rishaban
nice story ... it a hve a insight too great do well....
thanks azar
cute story .... romba twist ellam vaikkama evlo easya oru unarva padhinjirukkinga ..... vaaltthukkal
Post a Comment