Monday, November 23, 2009

ஏக்கம்!


என் வாழ்வில் சற்றே வந்து போய் இருக்கிறாய் நீ !
கடந்து போகின்ற முகம் தெரியாத மனிதர்களில் ஒருவனாய் நீயும்!
ஆனால் இன்னமும் இருக்கிறது
என் மேல் விழுந்த உன் முதல் பார்வை  பொக்கிஷமாய் மனதிற்குள்...
மனதில் உன் அடையாளங்களை காலம் மாற்றி போகும் என்றிருந்தேன்
மாற்றி போயிருகிறது
என் கவிதையின் கருபொருளாயும்
காதலின் முழு பொருளாயும் உன்னை...
உன்னிடத்தில் எப்படித் தோற்றேன் என்னை
என சிந்தித்து தளர்ந்து விடும் மூச்சில் இருக்கிறது
ஏதேனும் ஒரு நொடியின் முறிவில்
'உன் கண் பார்த்து என் நேசத்தைச் சொல்லியிருக்க வேண்டும்'
என்கிற ஏக்கம் !

4 comments:

பூங்குன்றன்.வே said...

//ஏதேனும் ஒரு நொடியின் முறிவில்
'உன் கண் பார்த்து என் நேசத்தைச் சொல்லியிருக்க வேண்டும்'
என்கிற ஏக்கம்//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்..இன்னும் பல பெண்கள் தங்கள் காதலை வெளியில் சொல்வதில்லை தோழி.கூடிய சீக்கிரமே பெண்கள் தங்கள்
மனதிற்கு பிடித்தவனை மணந்து கொள்ளும்(கொல்லும் இல்லை) சூழ்நிலை வரும் என்று நம்புவோமாக !!!

Mohan R said...

மனதில் உன் அடையாளங்களை காலம் மாற்றி போகும் என்றிருந்தேன்
மாற்றி போயிருகிறது
என் கவிதையின் கருபொருளாயும்
காதலின் முழு பொருளாயும் உன்னை...

ஏதேனும் ஒரு நொடியின் முறிவில்
'உன் கண் பார்த்து என் நேசத்தைச் சொல்லியிருக்க வேண்டும்'
என்கிற ஏக்கம் !


Padikira ellarukkum CHey sollli irukalamnu thoonum....

Sooperb

kavya said...

நன்றி மோகன்
பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவனை மணந்து கொள்வதற்கான சமூக சூழல் கூடிய சீக்கிரம் வரும் என்று நம்புவோம் .வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிபூங்குன்றன்

ரிஷபன் said...

சொல்லத் தவறிய கணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும்தான் அது கவிதையாய் பதிவாகி நிற்கும்போது கடந்த காலம் என்னுள்ளும் புரண்டு பார்க்கிறது தன்னையே !