Monday, November 30, 2009

கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்!!!!

பகட்டுத்  திருமணம் ஒன்றில் 
சரசரக்கின்றன காஞ்சிபுரமும் ஆரணியும் ...
பத்தாதற்கு வஸ்த்ரகலாக்களும் ஆர்யாகலாக்களும்...
வரிசையாய் நிற்கின்றன சீருந்துகள்...
சீதனமாய் நிற்பது விமானத்தில் வந்து இறங்கியது போலும்...
புன்னகைகளில் உண்மை இல்லை எனினும்
பொன்னகைகள் அனைத்தும் உண்மை....
செழிப்பில் திகைத்து ...
செயற்கை திகட்டி ....
நிலா தேடி வான் பார்த்து நடக்கையில்...
எதிர்ப்பட்டனர்....
வயிறு இளைத்த நாயும்...
நூல் சேலை போர்த்தி உறங்கிய தெருவோரச் சிறுவனும் .....
யார் சொன்னது கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று????

7 comments:

அகல்விளக்கு said...

மனதை ஏதோ செய்கிறது...

படமும் கவிதையும் அருமை என்று சொல்ல முடியவில்லை.

உண்மை என்று சொல்லலாம்.

//யார் சொன்னது கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று???? //

மக்களின் கையாலாகாத்தனம், அரசின் கையாலாகாத்தனம்,அதுபோன்ற குழந்தைகளின் பெற்றோருடைய கையாலாகாத்தனம்,பணக்காரர்களின் கையாலாகாத்தனம்,எனது கையாலாகத்தனம் - கடவுளை ஏன் சொல்ல வேண்டும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பத்தாதற்கு வஸ்த்ரகலாக்களும் ஆர்யாகலாக்களும்...//

நச்..

உள்மனம்வரை ஊடுறுவுகிறதுகவிதை

Mohan R said...

Sooperbbb

ரிஷபன் said...

எப்பவும் கஷ்டப்படுத்தற கேள்வி.. ஆனா இதுக்கு கடவுளைக் காரணம் சொல்றது நம்ம கண்ணை நாமே மூடிக்கற காரியம் இல்லியா காவ்யா.. அவரு இருக்காரா இல்லியாங்கிற சர்ச்சையே ஓஞ்ச பாடில்லை.. அவர விட்டுத் தள்ளுங்க.. மனுஷங்க என்ன செய்யப் போறோம்.. பார்க்காத மாதிரிதான் போகப் போறோமா.. நிறைய கேள்விகளை எழுப்பற பதிவு..

Chitra said...

உண்மை நிலை சொல்லும் நல்ல கவிதை. ஆனால்.........
"யார் சொன்னது கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று????"
தப்புங்க. கடவுள் மனிதனுக்கு மனித நேயத்துக்கு தரும் ஒரு வாய்ப்பு. அதை கண்டு கொள்ளாமல் தவறு செய்வது மனிதன்தான்.

kavya said...

இப்படிப்பட்ட நிலைக்கு கடவுளை காரணம் சொல்வது கையாலாகாதத்தனம் என்பது உண்மை .இத்தகைய நிலை நமது தவறு தான் என்பதை உணர்ந்து இருக்கிறோம்.இதை மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தும் ,மாற்றம் எதுவும் வராதது ஏமாற்றம்.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி "

என்று பராசக்தியிடம் கேட்ட பாரதியின் மனநிலையில் நானும் !

saraboji said...

nice...,