Sunday, September 21, 2008

நகரத்தில் அவள்....

பட்டணம் போனேன்

படிப்புக்காக! அப்புறம் பொழப்புக்காக........

இங்க உதிக்கிற சூரியன் நெதம் உதிக்க

மனச கழட்டி வச்சுட்டு

லையுதுக மனுச பயபுள்ளைக......

இத பாத்து மேகம் கூட இந்த ஊர விட்டு ஓடி போக

மழை இல்லாம தவிக்குதுக

ரத்தமு சதையுமா ஒன்னா வாழ்ந்த சனங்கள விட்டு,

இங்க வந்து......... ம்ம்ம்ம்.......

நாளுங் கெழமைகுந்தான் ஊருன்னு ஆயி போச்சு.......!

நல்ல நாளுக்கு ஊருக்கு போக ,

வேலை எல்லாம் மூட்ட கட்டி

மனச மட்டும் வாரி கட்டிக்கிட்டு ஊரு போயி இறங்குனா

வாழையுந்த் தென்னையும் பூரிச்சு நிக்குது

எம் மனசு போல.....

தண்ணி நெறஞ்சு ஓடற ஆத்த பாத்ததும்

மனசு நெறஞ்சு போச்சு....

அங்க ஏது தண்ணி? எங்கண்ணுல தவற.....

ஊரு வெயிலு கூட எதமா தான் இருக்கு....

அத்த மகள பாத்த உடனே என் அத்தான் படற வெட்கம்....

அதுக்கே வரலாம் ஆயிரந்த் தடவ ஊருக்கு.....!
கருவாட்டுக் குழம்பு , கேப்ப கூழுனு

ஆத்தா புண்ணியத்துல உடம்பு எட கூடி போக

வாய்க்கா வரப்பு பள்ளம் மேடுன்னு

ஊரைச் சுத்துனதுல கண்ணு பூத்து போக

நெறஞ்சு போச்சு மனசு !

எல்லாம் முடிஞ்சு......

ரயில்ல நா ஏறி உக்கார ....

நா விடற பெருமூச்ச ரயிலும் விட்டு கெளம்புது.......


அதுக்கு என்ன ஏக்கமோ............?















No comments: