இந்த இரண்டு பாடல்களுக்கும் உள்ள மற்ற இரு ஒற்றுமைகள்,வைரமுத்துவின் வரிகளும் சித்ராவின் குரலும்....!
மொழிகளை கடந்த தெய்வீகம் சித்ராவின் குரலில் உண்டு!
வைரமுத்துவின் வரிகள் ஒவ்வொன்றிலும் தமிழின் இனிமையை உணரலாம்!
இவை இரண்டிற்கும் மேல் கடவுளின் கரங்களால் வருடபடுவது போல் ஒரு இசை!
உண்மையில் காதலிக்காதவர்கள் இருக்கலாம்
இந்த பாடல்களை காதலிக்காதவர்கள் இருக்க முடியாது!!
இசையை விளக்க வார்த்தைகள் இல்லை... இந்த இசையில் நம் மனதை கரைய வைத்த சில வார்த்தைகள் உள்ளன....சில உங்கள் பார்வைக்கு....
முதல் பாடல் முழுவதுமே தேன் சொட்டும் கவிதை
"என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளை எங்கிருந்தாய்?
இன்று எழுதியே என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்....."
இதற்கு மேல் விவரிக்க வார்த்தைகள் தேவை இல்லை....
"என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளிஅறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?
நினைக்காத நாளே இல்லை காதல் ரதியே ரதியே
வானோடு நீலம் போலே இழைந்து போனது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனது காதல் உறவே!!! "
இவை இரண்டாவது பாடலில் வரும் வரிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment