Tuesday, October 6, 2009
மற்றொரு விடியல்
என்றும் போல் இன்றும் விடிந்திருக்கிறது.
எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்ற கேள்விக்கு பதிலுடன் சிலரும் தெரியாமல் பலரும்...
லட்சியங்களும் இலக்குகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன,வாழ்க்கைக்குபுது புது அர்த்தங்களை உண்டாக்கிக் கொண்டு ...ஒன்றை அடைந்த பின்மற்றொன்று .இலக்குகள் இருக்கின்றன வாழ்வின் இறுதிவரை.உறவுகளும்,பிரிவுகளும் இவற்றுள் அடக்கம்.பயணங்கள் பலவகை.ஒவ்வொன்றுக்கும் ஒரு துணை.
பாதைகள் மாறிப் போகையிலே பிரிந்து போகும் சில உறவுகள் ..அவற்றுள்,பிரிந்தாலும்உணர்வுகளிலே இருக்கும் சில .முற்றிலும் மறந்து,என்றோ ஒரு நாள் ஏதோ ஒருஞாபகம் கீற்று விட ஒரு புன்னகையை உருவாகிச் செல்லும் சில .எதற்கு என்றுதெரியாமலும்,ஏன் என்று விளங்காவிடினும் நம்முடன் இருந்து கொண்டேவதைக்கும் சில. இப்படி உறவுகளோடு சில காலம்,பிரிவுகளோடு சில காலம்என்றாலும் ஏதோ ஒரு இலக்கும் இலக்கு நோக்கிய பயணமும் நீள்கிறதுவாழ்வின் எல்லை வரை.முடிந்தன என் பணிகள் என யாரையும் மடியும் வரைசொல்ல விடுவதில்லை வாழ்க்கை.புதிது புதிதாய் பிறந்து மாய்கின்றன சவால்கள்.விடை தேடித் புறப்பட்ட பயணம் எது.கிடைக்கிற விடைகளும் வினா தொடுக்கும் விசித்திரம் இது.நெஞ்சை கீறுகின்ர வலி என்றாலும் விண்ணைமுட்டும் மகிழ்ச்சி என்றாலும் விழுங்கிக் கொள்ள ஓர் இரவு இருக்கிறது .வெற்றுத்தாளாய் உரைகள் நிரப்பப்பட மற்றொரு நாள் விடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment