Wednesday, March 10, 2010

அலைகள் விளையாடும் கடலில்
கால் நனைத்து விளையாடினோம்...
சிறு வீடு கட்டினோம்...
அலை வந்து அடித்துச் சென்ற போதும்
குதூகலத்துடனே திரும்பினோம்...
கடந்து போன காலங்களில்
கண்ணீர் இருப்பினும் அதில் கணம் இல்லை...
வலிகள் வந்து சென்றாலும் வடுக்கள் இல்லை...
'அன்பே கடவுள்' அர்த்தம் புரியாவிடினும்
அன்பு செய்து வாழ்ந்திருந்தோம்...
இன்று போனால் நாளை வருமென்றிருந்தோம்...
போனால் வராதது வாழ்க்கை என்று புரிந்து போன நாளில்
முறிந்து போனது இடிந்தாலும் கட்டி விளையாடும் குதூகலம்...

6 comments:

அகல்விளக்கு said...

//போனால் வராதது வாழ்க்கை என்று புரிந்து போன நாளில்
முறிந்து போனது இடிந்தாலும் கட்டி விளையாடும் குதூகலம்....//

நிதர்சனம்...

அருமையான கவிதை...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

குழந்தைகளாகவே இருப்பது சாத்தியமெனில் இவ்வுலகில் பெரியவர்களே இருக்கமாட்டார்கள் ...
நல்ல கவிதை

Raghu said...

ந‌ல்லாருக்குங்க‌, நீங்க‌ த‌ப்பா எடுத்துக்க‌லைன்னா ஒரே ஒரு suggestion. ப‌ட‌த்தை சென்ட‌ர்ல‌ போட்டுட்டு, ஒவ்வொரு வ‌ரியா இருந்தா இன்னும் ந‌ல்லாருக்கும்:)

Madumitha said...

உங்கள் கவிதை
மணலில் பதிந்த
கால் தடம் அல்ல.
பாறையில்
செதுக்கிய எழுத்து.
மனசில் நிற்கிறது.

Prabu M said...

வணக்கம் காவ்யா..
உங்களின் வாசகன் என்கிற முறையில் ஒரு தொடர்பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்.. (பிடித்த பத்து பெண்கள்)
சுட்டி: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
எழுதுவீங்கதானே!! :)

ரிஷபன் said...

இடிந்தாலும் கட்டி விளையாடும் குதூகலம்...
சிலநேரங்களில் சாதாரணமான சில வார்த்தைகள் என்னவோ செய்து விடும் .. இந்த நிமிடத்தைப் போல