திருச்சி,இங்கு தான் இளவேனில் மலர் பிறந்தது வளர்ந்தது எல்லாம். அப்பா உயர்நிலை பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். வீடும் பிள்ளைகளும் மட்டுமே அம்மா அறிந்திருந்த உலகம். அண்ணன் அவளை விட ஏழு ஆண்டுகள் பெரியவன். பரபரப்பு இல்லாத சவால்கள் ஏதும் இல்லாத வாழ்க்கை. 8 மணிக்கு பள்ளிக்கு கிளம்பி ௫ மணிக்கு வீடு திரும்புவதற்கு 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டால் கூட அம்மா,அண்ணன் ,அப்பா என மூவரிடமும் முறையே அரை மணி நேரம் விளக்கம் அளிக்க வேண்டும்.வாரக் கடைசியில் ரெண்டு தெரு தள்ளி இருக்கும் முருகன் கோவிலுக்கு தோழியுடன் செல்ல இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அனுமதி பெரும் படலத்தை தொடங்க வேண்டும்.BITS,pilani யில் படிக்க வேண்டும் என்பது அவளின் விருப்பம்.கனவு.போதுமான மதிப்பெண் இல்லை,விவரம் இல்லை ,குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லை ,இது போன்ற பல காரணங்களினால் அருகில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியில் படிக்கும்படி ஆயிற்று.இப்பொழுதெல்லாம் பிள்ளைகளை அவர் பெற்றோர் வளர்ப்பது பாதி,மீடியாவும்,இண்டர்நெட்டும் மீதி வேலையே செய்கின்றன.அப்படித்தான் அவளும்.அவளுக்கென பெரிய பெரிய லட்சியங்கள் இருந்தன.அவளுடைய கனவு முழுமையும் எல்லைகளற்ற கட்டுபாடுகளற்ற தனிமை நிறைந்திருக்கிற சுதந்திரமான ஒரு உலகம்,பரபரப்புகளும் சவால்களும் நிறைந்த ஒரு வாழ்க்கை,இதுவாகவே இருந்தது.. B.Sc முடித்து விட்டு MS படிக்க வேண்டும் என்றாள்.'சொல்றத கேளு' என்ற ஒரு வார்த்தையில் அவள் இளவேனில் மலர் B.Sc B.Ed ஆகி போனாள். படிப்பை முடித்த அடித்த நாளே teachers recruitment board exam அப்ளிகேஷனோடு வீட்டிற்கு வந்தார் அப்பா. 2 வருட முயற்சிக்கு பின் புதுக்கோட்டை மாவட்டம் கா.க.மூ.க.பட்டியில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியை பணியைக் கைப்பற்றி சாதனை புரிந்தாள்.இதற்கிடையில் அண்ணனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் ஆகிவிட்டிருந்தன.விவாகரத்தும் கூட.உடல் நலக் குறைவு,அண்ணனின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் கல்வி என சில காரணங்களால் அம்மாவும் அப்பாவும் அண்ணனுடனே தங்கி விட ,மலர் கா.க.மூ.க.பட்டியில் தனியே தங்கி வேலைக்கு செல்ல ஏற்பாடு ஆனது.முதல் முறையாக தன் கனவு ஒன்று நனவாகிவிட்டதாக அவளுக்கு பட்டது.வாசலை தாண்டி காலாற பத்து அடி நடப்தற்கு இனி மூவரிடம் அனுமதி வேண்டி நிற்க வேண்டியது இல்லை.நேசித்த தனிமை,சுதந்திரம் அனைத்தும் தாராளமாய்க் கிடைத்தது.எழில் கொஞ்சுகின்ற அந்த கிராமம் இயல்பாகவே இயற்கையை ரசிக்கும் மலரின் மனதிற்கு இதமாக இருந்தது.ஏதோ ஒரு தோஷம் காரணமாக அவள் திருமணம் தள்ளி போய்க் கொண்டே இருப்பதாக அம்மா தொலைபேசியில் நொந்து கொள்வாள்.இவளோ தினம் தினம் அந்த தோஷத்திற்கு நன்றி சொல்லி வந்தாள்.6 மாத காலத்தில் சின்ன டிவி,லேப்டாப் ,அதில் வில் போன் connection புண்ணியத்தில் இன்டர்நெட் என கா.க.மூ.க.பட்டியில் அவள் வாழ்க்கை இன்னும் ரம்மியமாகி போய் இருந்தது.ஒரு கட்டுபெட்டியான சூழலிலேயே இருந்ததால் பெங்களூர்,மும்பை போன்ற நகரங்களின் மெட்ரோ வாழ்க்கையில் அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.நுனி நாக்கு ஆங்கிலம்,மாடர்ன் உடை,மொபைல்,ipod.. இத்யாதி இத்யாதிகள் மேலான மோகம் அதற்கு காரணம்.மொத்தமும் சேர்ந்து ,வட இந்தியப் பெருநகரம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய IT company இல் பணிபுரிவதாக சொல்லிக் கொண்ட ராகுல் என்ற எலைக்னோடு காதல் என்ற புள்ளியில் முடிந்தது.இருவரும் அறிமுகம் ஆனது orkut இல் .இவளுடைய பின்னணியை போல இவளும் காதலில் சின்சியராக இருந்தாலும் அவன் அப்படி இல்லை.இவளுடைய போட்டோவை அவனுக்கு அனுப்பி இன்றோடு 7 நாட்கள் ஆகின்றன.முதல் நான்கு ஐந்து நாட்கள் reply மட்டுமே இல்லாமல் இருந்தது.நெற்றில் இருந்து orkut இல் அவனுடைய அக்கொவுன்டையே காணவில்லை. மொபில் சதா சர்வ காலமும் சுவிட்ச் ஆபீல் இருந்தது.மலரால் வாடவும் முடியவில்லை,வாழவும் முடியவில்லை.துக்கம் தொண்டையை அடைத்து கொள்ள,வேலை எதுவும் இல்லாத நேரங்கள் அனைத்தும் நரமாகி போனது.இந்த கிராமம்,இந்த வீடு,இந்த வாழ்க்கை எதுவும் பிடிக்கவில்லை.அதை விட இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கும் கோடை விடுமுறையும்,அதை அவள் பிறந்த வீட்டில் செலவழிக்க வேண்டும் என்பதும் பிடிக்கவில்லை.பாரதி சொல்வது போல் இன்று புதிதாய் பிறந்தால் என்ன என்று தோன்றியது.எப்பொழுது எரிக்கின்ற எல்லாத்தையும் உதறி தள்ளி விட்டு புதிய ஒரு உலகத்திற்கு போக வேண்டும் போல் இருந்தது.
நீண்ட கால தோழி ஒருத்தி போனில் அழைத்தாள்."என்னடி எப்டி இருக்க..." என ஆரம்பித்து பொதுவாக பல விஷயங்கள் பேசுகையில் அவள் சொன்னாள்.... hey orkut எல்லாம் பழசுடி .. இப்போ புதுசா ஒன்னு வந்துருக்கு.be-new.com னு.. எதுவும் ஒரு social networking site தான்.ஆனாலும் ரொம்ப புதுசா இதுல ஒரு விஷயம் இருக்கு டி.என்ன னா..இட்ஸ் allowed ஒன்லி for singles....அதாவது தனி வீட்ல தனியா இருக்கறவங்களுக்கு மட்டும் தான்.எக்கு தப்ப எதுவும் நெனச்சுக்காத டி.இதுக்கு பேரு ஹவுஸ் ஸ்வாப்பிங்.ஒரு பத்து நாள் னு வச்சுகொயேன்... உனக்கும் லீவ் எதோ ஒரு ட்ரிப் பிளான் பண்ற...எங்கேயோ இருக்ற உன்னோட be-new.com friend கும் அதே பிளான் னா... mutual ஆ பேசி நீங்க ரெண்டு பெரும் அந்த குறிப்பிட்ட பத்து நாளைக்கு வீட்ட மாத்திக்றது.....அவங்க வீட்ல நீயும்...உன் வீட்ல அவங்களும் தங்கிக்கலாம்.அதுக்கான rules எல்லாம் கிளியரா வெப்சைட் ல இருக்கு. பத்து நாளைக்கு புது லைப்...கம்மி செலவுல...நல்ல இருக்கு ல..." என்றவள் தொடர்ந்தாள்."அப்புறம் உன் ப்ளாக் போட்டு இருந்த love failure கவித சூப்பர்.ரொம்ப ரியல்லா இருந்துச்சு...இந்த லீவுக்கு என் வீட்டுக்கு வாடி.எங்க அப்பா கிட்ட permission வாங்கிட்டா நம்ம பக்கத்துல எங்கயாவது போயிட்டு வரலாம்...." மறுபடியும் அப்பாகிட்ட permission ஆ?நொந்து கொண்டு "இல்ல டி... இங்க வேல இருக்கு ... சரி அப்றமா பேசுறேன் " என்று தொடர்பைத் துண்டித்து விட்டு,படுத்தாள்.தூக்கம் வரவில்லை.எங்கெங்கோ சுற்றிய யோசனை இறுதியாக தோழி சொல்லிய be-new.com இல் வந்து நின்றது..."பத்து நாளைக்கு புது லைப்...கம்மி செலவுல...நல்ல இருக்கு ல.." நல்ல இருக்கே என்று தோன்றியது.ராகுலின் நினைவுகள் இல்லாமல்,முகவரி ஏதும் இல்லாமல் ,என் பேர் என்ன என்று யாருக்கும் தெரியாத ஒரு ஊரில் பத்து நாட்கள்...இது தான் சரி என பட்டது.your-place: pudukkottai-kaka-mooka patti
speciality of your place-beautiful village with lush green trees and fields
wanna swap house with(male/female)-female
wanna swap with a friend in-bangalore
no.of days-3 weeks
agree with the terms and conditions-yes
sex-female
age-28
industry-Animation an graphics
house location-bangalore
speciality of the place-most happening city in the country.
no.of days-3 weeks
preference-lush green village in tamil nadu.
swashika is now online.click here to chat with her.
என முடிந்தது அந்த பக்கம்.Animation and graphics, bangalore ,most happening city in the country.முடிவு செய்து விட்டாள் மலர்.click here இல் சொடுக்கி "ஹாய்" என்றாள்.house location-bangalore
speciality of the place-most happening city in the country.
no.of days-3 weeks
preference-lush green village in tamil nadu.
swashika is now online.click here to chat with her.
malar-hi
swash-hi malar!how do u do?
malar-doing good.your name sounds very good
swash-thanks,u too got a peculiar name.nice it is...
swash-any men in your place.....?i wanna be in a world atleast for 3 weeks without those creatures !!!!!!!
(அப்படி என்ன ஆண்களின் மீது கோபமோ என்று நினைத்த மலரின் மனதிற்குள் கொஞ்சம் காதல் ஆசை இருந்தது.பெங்களூருவிலாவது தன் orkut காயத்திற்கு மருந்து கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. )
swash-fine :)
malar-men in your place??????
swash-lots! sure.. will liv upto your taste!!!!!!
(-தொடரும் )
கதையை படித்த சிலருக்கு எங்கோ பார்த்த ஞாபகம் வரலாம்.
சொல்லி விடுகிறேன்.கதையின் மையக்கரு "the holiday" என்னும் hollywood படத்தினுடையது.cameron diaz மற்றும் kate winslet நடித்த இப்படத்தின் ஒற்றை வரி விளக்கம் Two women troubled with guy-problems swap homes என்பது .அதை நம்ம ஊருக்கு ஏற்ற வகையில் மாற்றி இருக்கிறேன். இளவேனில் மலர் மற்றும் ஸ்வாஷிகா,அவர்களின் பின்புலம் முதலியவை எனது கற்பனையே.அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தவர்கள் அந்த கதையை நான் இங்கு கொலை செய்திருப்பதாக நினைத்தால் ... தயவு செய்துமன்னிக்கவும்.
5 comments:
பதிவு முடிவு தெரிஞ்சுக்கிட்டு .. கமெண்ட் போடறேன்...
கதையை படித்த சிலருக்கு எங்கோ பார்த்த ஞாபகம் வரலாம்.
சொல்லி விடுகிறேன்.கதையின் மையக்கரு "the holiday" என்னும் hollywood படத்தினுடையது.cameron diaz மற்றும் kate winslet நடித்த இப்படத்தின் ஒற்றை வரி விளக்கம் Two women troubled with guy-problems swap homes என்பது .அதை நம்ம ஊருக்கு ஏற்ற வகையில் மாற்றி இருக்கிறேன். இளவேனில் மலர் மற்றும் ஸ்வாஷிகா,அவர்களின் பின்புலம் முதலியவை எனது கற்பனையே.அந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தவர்கள் அந்த கதையை நான் இங்கு கொலை செய்திருப்பதாக நினைத்தால் ... தயவு செய்துமன்னிக்கவும்.
அப்படி போதா கதை?
முடிஞ்சா நம்ம பக்கம் வர்றது...?
very nice di..... naan yetho namma katha odutho nu nenachen (swasikka)
Post a Comment