Wednesday, December 23, 2009

மே மாதம்(2 )


-2 -.............. பெங்களுருவின் மேல் மலருக்கு ஈர்ப்பு ஏற்பட ஒரு காரணமிருந்தது.ஆனால் ஸ்வாஷிகா ஏன் காக.முக.பட்டிக்கு வர வேண்டும்.அதற்கும் கரணம் இல்லாமல் இல்லை.சிறு வயதிலேயே பிரிந்து விட்ட தாய் தந்தையர்,பாட்டியோடு டெல்ஹியில் கழித்த டீன் ஏஜ் பருவம்..அரவணைப்பு,கண்டிப்பு, ஏதும் இல்லாத வாழ்க்கை.சாதனைகளும்,மைல் கற்களும் அவள் வாழ்க்கையில் இருந்தன. அன்பும்,நேசமும்,கவனமும் கொள்வதற்கு யாரும் இல்லை. அவளே தேடிக் கொண்ட வாழ்க்கையும் அவளுக்கு ஏமாற்றத்தைத் தர விரக்தியின் விளிம்பில் இருந்தாள்.தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்கள் அவள் மனதை வெறுமையாக்கி வைத்து இருந்தன.மனம் நொந்து அழுதால் கூட ஒரு துளி கண்ணீர் கண்ணில் இருந்து வெளி வராத வண்ணம் மனம்  இறுகி இருந்தது.படிப்பறிவில்லாத ஒரு கிராமத்து பெண்ணாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குட அவளுக்கு சில சமயங்களில் தோன்றும் ஒரு அமைதியான வாழ்க்கை,குறைந்த பட்சம் ஒரு சில நாட்களுக்காவது அவளுக்கு தேவை பட்டது.அதனாலேயே காக.முக.பட்டிக்கு பயணம்.

        மே 3 அன்று காலை காக.முக.பட்டியில் ஸ்வாஷிகாவும்,பெங்களுருவில் மலரும் வந்திறங்கினர். முதல் நாள் தாங்கள் விரும்பிய இடத்தில் ருவருக்கும்  இனிமையாய் கழிந்தது.தங்கள் காயங்களை மறுப்பதற்கான சூழல் ஆறுதல் தந்தது.அடுத்த நாள் காலை 8 மணிக்கெல்லாம் ஸ்வாஷிக்காவின் வீட்டு கதவு தட்டப்பட்டது. நல்ல உறக்கத்தில் இருந்த அவள் எழுந்திரிக்கவில்லை.வெளியில் தன் இரு குழந்தைகளுடன் வெகு நேரம் கதவைத் தட்டி களைத்து போன மலரின் அண்ணன் ,மலருக்கு இவ்வளவு நேரம் தூங்கும் பழக்கம் இல்லையே  என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே பக்கத்து வீட்டு பாட்டி வனைப் பார்த்து விட்டு சொன்னாள்.....  'என்னப்பா உன் தங்கச்சிய பாக்க ஒரு நாள் கூட வந்தது இல்ல...பொண்டாட்டி வந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளே அவல பாக்க புள்ளைங்களோட வந்துட்டியா..இவ்வளவு பாசம் வைச்சுருகிறவன் ஏன் சண்ட போடணும்"என்று சொல்லி சிரித்தாள்.பொண்டாட்டியா?என்று குழம்பியவன்..." இல்லம்மா.. அது வந்து ..." என்று அடுத்து ஆரம்பிப்பதற்குள் .. அவளே தொடர்ந்தாள்.. மலர் ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லாம் சொல்லிட்டு தான் பா போனா..." என்று மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவள் நகர்ந்து விட... மலர் ஊருக்கு போய் இருக்கிறாளா ? என் குழப்பத்துடன் இவன் திரும்ப... நீல நிற நைட்டியும் கலைந்த கூந்தலுமாக இவன் முன் நின்றது  ஸ்வாஷிகா.சிலநொடிகள் தன்னை மறந்து அவளை பார்த்து விட்டு பின் சுய நினைவு வந்தவனாய் சற்றே பதறிய அவன் "அ.. அது வந்து... சாரிங்க.. இங்க என் தங்கச்சி..." என்று மென்று விழுங்க கணப் பொழுதில் நிலையை உணர்ந்து கொண்ட அவளோ நீங்க மலரின் ...? என்று இழுக்க  .."அண்ணன்" என இவன் முடித்தான்."உள்ள வாங்க.." என்று அவனை அழைத்து அமரச் செய்தாள்.மலர் ஏற்கனவே தன் குடும்பத்தை பற்றி ஸ்வாஷிக்கவிடம் சொல்லி இருக்கிறாள் எனினும் இந்த அண்ணனை பற்றி சொல்லியதில்லை.யோசித்துக் கொண்டே அவள்.."மலர் அவளோட higher studies விஷயமா பெங்களூர் போய் இருக்கா. நான் அவளோட பிரெண்ட் .லீவுக்காக இங்க வந்து இருக்கிறேன்.நான் வந்த நேரம் அவ போகும் படியா ஆய்டுச்சு.உங்க வீட்ல ரொம்ப strict நாள உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போய் இருக்கா. இன்னும் 2 அல்லது 3 நாள்ல வந்துருவா.எனக்காக  அவள மன்னிக்கணும்." என்று சொல்லி புன்னகைத்தாள்.அவள் பேசிய விஷயத்தை விடவும் பேசுகின்ற விதத்தையே மிகவும் க்வநித்ததாலும்,தான் பேச வேண்டிய முறை என்பதை சற்றே தாமதமாக உணர்ந்ததாலும் ,லேசாய் தடுமாறி பின் சொன்னான்."ம்ம்.. அப்டியா.. சரிங்க.. நா அவ கிட்ட போன் ல பேசிக்கிறேன்...நான் வரேன்" என்று கிளம்ப..."குழந்தைகளோட வந்து இருக்கீங்க..என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.." என்றால் அவள்."இவங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டாச்சு.அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்.ரெண்டு நாள் இருந்துட்டு மலரையும் கூட்டிட்டு போலாம்னு ..." என்றான்.இதற்குள் அவள் மூவருக்கும் பால் போவ்டேரில் ஆற்றிய காபியை கொடுத்திருந்தாள். மெதுவாய் காபியை உறிஞ்சியபடி அவள்.."உங்க  wife  வரலையா ' என்றாள்.ஒரு சில வினாடிகள் இடைவெளிக்கு பின் அவன் தெளிவாய் சொன்னான்."இல்லங்க..நான் ஒரு  divorcee"..."ஓ...சாரி..." என்றவள் குடித்த கப்பை கீழே நிதானமாய் வைத்து விட்டு " நானும் கூட...  " என்றாள்.இந்த ஒற்றுமை இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை,நட்பிற்கான விதையை தூவியது.முறிந்து போன தம் திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டனர் இருவரும்.தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அவன் கூறியதில் இருந்த நேர்மை ஸ்வாஷிக்காவை கவர்ந்தது.இது வரை அவள் வாழ்க்கையில் கடந்து போன ஆண்கள் ,அவள் தந்தை மற்றும் கணவன் உட்பட யாரும்,ஆண்கள் குறித்து ஒரு நல்ல எண்ணம் இவள் மனதில் வரும் வண்ணம் நடந்து கொண்டது இல்லை .இருந்தும் இவனை பார்த்த கணம் முதல் இப்பொழுது வரை இவன் கண்களில் தெரிந்த நேர்மை இவன் மீது ஒரு ஈர்ப்பை உண்டாகியது என்றால்..   ஸ்வாஷிகாவின் அன்பிற்கான தேடல் நிறைந்த வாழ்க்கை இவனை ,அவளை நேசிக்கும்படி செய்தது."சரிங்க... தெரியாம வந்து உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கணும்.இருந்தாலும் உங்களை சந்திச்சது ரொம்ப மகிழ்ச்சி.காபிக்கு தேங்க்ஸ்..நாங்க கிளம்பறோம்" என்றான்.சற்றும் யோசிக்காமால் ஸ்வாஷிக்கா சொன்னாள்."என்ன கிளம்பிடீங்க...ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு தான வந்தீங்க.இருந்துட்டு போலாமே.." எந்த உள்நோக்கமும் இன்றியே அவள் அப்படி சொன்னாள்.அவள் வளர்ந்த விதம், அப்படி அவனை அங்கு தங்க சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக அவளுக்கு சொல்லவில்லை.ஆனால்,அவன் அப்படி இல்லை.கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்தவன்.நமது வழக்கப்படி எது தவறு எது சரி  என அறிந்தவன்.மேலும் ஒரு காரியம் செய்யும்  போது அதன் பின்விளைவுகளை யோசித்து பின் செய்பவன்.இருந்தாலும்,ஸ்வாஷிக்கா கேட்டவுடன் முதல் முறையாக,நாளையை பற்றிய யோசனை இன்றி "உங்கள் விருப்பம்" என்றான்."ரொம்ப சந்தோசம்..." என்று புன்னகைத்தவள்..ஆமா உங்க பேர சொல்லவே இல்லையே என்றாள்..."ராம்.. உங்க பேரு?"... "ஸ்வாஷிகா"...

-தொடரும்

4 comments:

angel said...

very nice write the nxt part soon pls
i m eagerly waiting

பூங்குன்றன்.வே said...

இன்டர்ஸ்டிங் ஸ்டோரி !

ப்ரியமுடன் வசந்த் said...

காக.முக பட்டின்னா இன்னாங்க?

ruby said...

hey my story swasikka life history s continuing di......... wow.. well done. cha enna oru ottruma namma rendu perukkum?????????