மழை நேரத்து குடை அல்ல நட்பு! வண்ணங்கள் மட்டும் தூவிச் செல்ல வானவில் அல்ல நட்பு! அது கற்பத்தில் தாய் கொடுக்கும் வெப்பம் உள்ளே உலவும் உணர்வுகளை வெளிக்காட்டும் கண்ணீரின் முதல் துளி!!
எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும் பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன் என் பட்டறையில்..
எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில், பெய்த மழை நீரின் மிச்சத்தில் வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என வேண்டாதவைகள் மனதில் தேக்கி ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..
No comments:
Post a Comment