Friday, February 20, 2009

முடிவில்லாப் பயணம்

கிழமைகள் விரிய கசங்கும் மனது
விடியல் வெளிச்சம் கொண்டு வருமென
காத்திருக்கிறேன் என் விடியாத இரவில்....

நட்சத்திரமாய் மின்னும் என் வேட்கை
எட்டிப் பிடிக்க ஏணியைத் தேடி
தொடர்கிறது என் முடிவிலாப் பயணம்

அலைகளின் நுரைகளில் எழுதி விட்ட
என் கேள்விகளுக்கு விடை சுமந்து வந்து
என்னிடமே தங்கி விடும் அலையை எதிர்பார்த்து
நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன் கரையினில்....

ஒவ்வொரு நாளின் முடிவிலும்
உலகின் எல்லையில் இருப்பதாய் உணர்ந்து
மீண்டும் சங்கமித்துப் போகிறேன்
இனம் புரியாத இரைச்சலில் ......

3 comments:

Anonymous said...

Mudivilla payanam...nanraga mudinthulathu....vaalthukal...

ruby said...

iravu ponal pagal, oru alai ponal innoru alai. ulagathitku illai oru eallai. so un payanam inidhaai amaya vaalthukal

krishna said...

ahhh es where do you have these kindaf abilities hmmm we can only enjoy sorry i can enjoy as i dont know to write poems and you are doing grt work showing your feel in the form of poems awesome... have a long trip in your blog.............................