Friday, January 30, 2009

இனிய இசை சோகமுடைத்து!

ஒலித்துக் கொண்டிருக்கிறது
என்னுள் ஒரு பாடல் எப்போதும் .......
உணரப்படாமல் உள்ளே ஓடும் உதிரம் போல்.....
சிறகின் பலம் தெரியாது
விரித்து பறக்கின்ற வரை....
வானத்தை வசப்படுத்தி விடும் வேகத்தை
ஒலியாய் தெறித்துக் கொண்டிருந்தது என் பாடல்
தோல்வியின் ரேகைகள் இல்லை என் பாடலில்!
ஏக்கங்களின் அர்த்தம் கூறவில்லை என் பாடல்!
இனம் புரியாத இரைச்சல்களின் நடுவேயும்
தெளிவாய் ஒலித்துக் கொண்டிருந்தது என் பாடல்!
தனித்து இருந்த போதிலும் கேட்டறியவில்லை
என்பாடலை நான்!
தனிமையில் ஒலித்தது சன்னமாய் என் காதுகளுக்குள்........
எதிர்பார்ப்புகளை வரிகளாய் வடித்திருந்தது என் பாடல்...
வரிகள் நீண்டன என் பாடலில்
காயங்களை கவிதைகளாய் வடித்துக் கொண்டு !
கவிதைகளின் வரிகள் வாசிக்க முயல்கையில்
விழி மறைக்கிறது நீர் திரை
ஒலி கேட்க முயன்றால்
இசைக்கிறது மௌன ராகமாய்
ஏதோ நிசப்தம்....
உயிர் இறந்ததோ ?
இதயத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன்!
"இனிய இசை சோகமுடைத்து"
எங்கோ படித்ததாய் ஞாபகம்

3 comments:

Anonymous said...

Tamil ilakana pilaykal neraiya ullathu...this is from the panel of critics by no 14

Anonymous said...

வானத்தை வசப்படுத்தி விடும் வேகத்தை
it sud வசப்படுத்தி+விடும் but it sounds like விடும்+வேகத்தை

n such many sorts...people got confused reading this where it leads to finally...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.