Monday, September 22, 2008

அவள்......

நா பொறந்த வேளையிலே....

என் ஆத்தா அம்மனுக்கு வேண்டிக்கிட்டா....

புள்ள நல்லபடியா பொறக்கனும்னு இல்ல...

அவ பொறந்த வீடு போயிர கூடாதுன்னு ...

நாலாவதும் பொட்டையினா

இவள கட்டி கிட்டதுல

பிரயோசனம் இல்லடா....

புள்ளைய கொன்னுபுடு ...

இவள ஒழிச்சுபுடுன்னு பெரியாச்சி சொன்ன பொறவு

ஆத்தாள சொல்லியுங் குத்தமில்ல

அய்யனச் சொல்லியுங் குத்தமில்ல.....ம்ம்.....

அஞ்சு வயசு ஆனா பொறவு

பள்ளி கூடம் போனேன் ...

அஞ்சாப்பு தாண்டுன உடனே

அய்யன் சொல்லிடுச்சு

நாத்து நடவுக்கு போனா

நாள் ஒண்ணுக்கு அம்பது ரூவா......

பொட்ட புள்ளைக்கு

பள்ளி கூட படிப்பு எதுக்குன்னு

அதுக்கு பொறவு ,

நா அறிஞ்சதெல்லாம் .....

அய்யனாரு பெட்டிக் கடை!

ஆத்தோர புளியமரம் !

ஊர்க் கோடி அம்மன் கோயிலு...!

பள்ளிக் கூடத் தெசயும்

மறந்து போச்சு!

ஆளான பொறவு

திருவிழாவுல பாத்து,

"எ புள்ள என்ன கட்டிகிருவியானு?"

கேட்ட மச்சான

வெட்டத் தூக்குன அருவாள , அய்யன்

கீழ போடுறதுக்குள்ள ஆத்தாளோட பாதி உசுரு போச்சு.....

அக்காமார்களுக்கு போட்டது போக,

மிஞ்சுன நக நாட்டுல பதினாறு வயசுல ஜோரா நடந்துச்சு என் கல்யாணம் ....!

அவுக பட்டாளத்துல போராடுராகன்னா

இங்க நா அவுக மக்களோட போராடுறேன்.....

நேத்தும் போயிட்டு வந்தேன்

நிற மாசக்காரியா .... ஊர்க் கோடி அம்மன் கோவிலுக்கு...

புள்ள நல்லபடியா பொறக்கனும்னு இல்ல....

நா பொறந்த வீடு போயிர கூடாதுன்னு!!!!!!!!!!!!

2 comments:

KARKE @ Karthikeyan said...

"AVAL"

NO WORDS... DIS S THE VERY VERY VERY BEST OF YOURS I READ... EXCELLENT EVEN IN THESE COLOCHIAL WORDS... "AVAL"luku HATS OFF.. "UNA"ku DOUBLE HATS OFF...

mudal-pathippu said...

how esh... where u got all these.. simply superb... struck up in words..
great job.. paamaranukku kuda purira mathiri eluthirika... puli na puli thannn......