Thursday, November 5, 2009

நீயாக நீ!

உன்
உருவம் சரியாய் நினைவில்லை...
எத்தனை வார்த்தைகள் பகிர்ந்து கொண்டோம்
அதுவும் சரியாகத் தெரியவில்லை...
என் கவிதைகளிலும்
கனவுகளிலும் நீ நிறைந்திருப்பதை
மறுக்கவோ மறைக்கவோ இயலவில்லை..
என் பயணங்களில்,அனுபவங்களில்
தினசரிகளில், வெற்றியில், தோல்வியில்,
மகிழ்ச்சியில்,சோகத்தில் எப்போதும் உடனிருக்கிறாய் கானலாய்....
இருந்தும் இல்லாமலிருப்பது எப்படி...
புரியவில்லை...
எங்கிருக்கிறாய் நீ
என்னுள் எதுவாய் இருக்கிறாய் நீ.....
கேள்விகள் மட்டுமே உள்ளது என்னிடம்...
இந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும் போதெல்லாம்
அடைத்துக் கொள்கிறது தொண்டைக்குழி....
கவிதையில் விடுபட்ட ஒரு சொல் போல நீ....
கண்ணில் திரண்டு கன்னத்தில் விழ மறுக்கும் கண்ணீர் துளி போல நீ...
மறக்க முயல நினைவுகளென்று ஏதும் இல்லை....
மரித்தும் போவதில்லை இந்த விளங்காத உணர்வுகள்....

6 comments:

Mohan R said...

கவிதையில் விடுபட்ட ஒரு சொல் போல நீ....
கண்ணில் திரண்டு கன்னத்தில் விழ மறுக்கும் கண்ணீர் துளி போல நீ...
மறக்க முயல நினைவுகளென்று ஏதும் இல்லை....
மரித்தும் போவதில்லை இந்த விளங்காத உணர்வுகள்....

Nice one

SASI said...

Esh superb.. kaviya "Nee" kavyam theeti irukirai NEE NEEYAGA.... Photolayum kaviyam theriyuthu nice photo........

kavya said...

நன்றி மோகன் ,சசி

jgmlanka said...

மறக்க முயல நினைவுகளென்று ஏதும் இல்லை....
மரித்தும் போவதில்லை இந்த விளங்காத உணர்வுகள்....
அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்

kavya said...

நன்றி பூங்கோதை

ரிஷபன் said...

கவிதையில் விடுபட்ட ஒரு சொல் போல நீ....
வாவ்.. அற்புதம்.