முன்னிரவில் சிறு கால்கள் உதைப்பதை உணர்வேன்
பூரித்து நான் உன் முகம் பார்த்து தலை கோத
உறக்கம் கலையாமலே 'இன்னும் தூங்கலையா. .'
என்றே அனைத்து உறங்குவாய் என்னோடு உன் பிள்ளையையும்
வலப்பக்கம் இருந்த தலை திரும்பி அடிப்பக்கம் தட்ட
மின்னல் போலே ஒரு வலி பாயும் முதுகின் தண்டில்
இடுப்பின் எலும்புகள் அகல
உண்மையிலேயே இடுப்பொடியும் வலி அறியும் நொடி பிறக்கும்
அணுக்கள் அத்தனையும் வலி உணரும்
மங்கிய என் கண்களில் உன் முகம் நிறையும்
எண்ணத்திலே நீ இருப்பாய்
உடல் தளர்ந்தாலும் மனம் தளராது
சுவாசித்திருப்பேன். .
அறியாமல் களைத்தே போய்
உடல் உஷ்ணம் யாவும் இழக்கும்
இருள் நிறைந்த வேறொரு உலகில் மெல்ல நான் பயணிப்பேன். .
முன்னொரு நாள் நீ கொடுத்த முத்தத்தின் வெப்பம்
எனை சூழ முயற்சித்தே விழித்திடுவேன் . . .
உயிர் நழுவும் பொழுதில்
உள்ளிழுத்த காற்று உள்ளுக்குள்ளே நிற்க
யாவும் ஸ்தம்பிதிடும். . .
நொடி முடிந்த பின்னே அமைதி கொள்வேன்
உன் உயிர் பிறந்ததென்று. . . .
2 comments:
"உன் உயிர் பிறந்ததென்று..!!!
யாவும் ஸ்தம்பிதிடும். . .
நொடி முடிந்த பின்னே அமைதி கொள்வேன்!!!"
how sweet!! :)
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
நன்றி…
Post a Comment