ரொம்ப நன்றி பிரபு.என்னையும் ஒரு வலை பதிவராக மதித்து அழைத்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.உண்மையாகவே உங்கள் அழைப்பு ஒரு இனிய அதிர்ச்சி
எனக்கு பிடித்த பத்து பெண்கள்
எனக்கு பிடித்த பத்து பெண்கள்
(வரிசைப்படி எல்லாம் போடவில்லை.வரிசைபடுத்தவும் தெரியவில்லை.)
1 .பார்க்கா தத்
தினம் அனைவரும் பார்க்கும் முகம் தான்.NDTV யின் prime time talk show "the buck stops here" ஐ நடத்துபவர்.NDTV யின் எடிட்டர்களில் ஒருவர்.சாதாரண செய்தியைக் கூட sensation ஆக்க முயல்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும்,எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரிடம் கேட்க வேண்டியவைகளை நச்சென்று கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.முகத்தில் ஒளிரும் தன்னம்பிக்கையும்,தேவையான நேரத்தில் உதிர்க்கும் புன்னகையும்,...at any time she is an idol for modern age Indian woman.3.சான்ரா புல்லாக்
வழக்கமான hollywood நடிகை தான்.உண்மையாக இவர் நடித்த miss.congeniality என்கிற படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.அதில் இருந்தே அவர் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் பார்ப்பேன்.பொதுவாக அழகுக்கு சொல்லபடுகிற இலக்கணங்களுக்குள் இவர் வர மாட்டார் என்றாலும் முகத்திலும் body language லும் தெரிகிற தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.சமீபத்தில் ஆஸ்கார் வென்றிருக்கிறார்.
4 பிரியங்கா சோப்ரா
சான்ரா புல்லாக் போலவே தான் இவரும்.ஆனால் இவர் கொள்ளை அழகு.இவரது நடிப்பை விட இவரது attitude மற்றும் சமூக சேவைகள் மிகவும் பிடிக்கும்.
5 செல்லம்மா
பாரதியின் செல்லம்மாவே தான்.கொள்கை பிடிப்புடன் இருப்பவர்களோடு எதார்த்தமான மனநிலையோடு இருப்பவர்கள் இருப்பது மிகவும் கடினம்.அத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் வீட்டில் சமைக்க வைத்து இருந்த அரிசியை எடுத்து 'காக்கை குருவி எங்கள சாதி' என பறவைகளுக்கு வீசி எறிந்த பாரதியோடு எப்படி குடும்பம் நடத்தி இருப்பார் இந்த பெண்மணி.என்னை கவர்ந்த பெண்மணிகளில் இவரும்ஒருவர்.
6.ஊர்மிளை
அதிகம் அறியப்படாத ஒரு காவிய பாத்திரம்.லக்ஷ்மணனின் மனைவி.ராமரோடு வனத்திற்கு சென்ற சீதையை பற்றி இன்றும் பேசி வருகிறோம். அண்ணனுக்கு சேவை செய்த லக்ஷ்மணனின் நினைவாகவே வாழ்ந்தவள் ஊர்மிளை.மகாபாரதத்தில் கர்ணனுக்கு இழைக்கப் பட்டது போல் இவளுக்கு இழைக்குப்பட்டதும் அநீதி என்றே தோன்றுகிறது.காவியங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்.
7.செய்னா நேவல்
டென்னிசில் டாப் 30 குள் வந்த சானியாவுக்கு கிடைத்த அளவுக்கு புகழ் 'சூப்பர் சீரீஸ்' வென்ற செய்னாவுக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.glamour quotient கம்மி என்பதாலா என்று தெரியவில்லை.
8 .கிம் கிளிஸ்டர்ஸ்
திருமணத்துக்கு பிறகு பெண்கள் வேலைக்கு செல்லலாமா சென்றாலும்,career இல் பெரிய உச்சங்களை தொட முடியுமா என்ற விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கையில்,அசால்டாக ஒரு கிராண்ட் ஸ்லாமைத் தூக்கி இருக்கிறார் இந்த இளம்தாய்.
9 .ராதா
கிருஷ்ணரின் ராதா இல்லை. எனது பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியை..ஆசிரியப் பணியை வெறும் பணியாக செய்யாமல் மனம் முழுவதையும் ஈடுபடுத்தி செய்தவர்.இவர் கொடுத்த motivation speeches இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு சத்தியமாய் இவரை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அவர் இப்பொழுது இல்லை.நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது.
10 சோனி மோகனன்
one of my best friends.என் தோழிகள் அனைவரையுமே எனக்கு பிடிக்கும்,அனைவரையுமே நான் நேசிக்கிறேன் என்றாலும் இவரிடம் தோழி என்பதையும் தாண்டி பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எதையும் எதிர்நோக்குகின்ற தைரியம் ,சுய நலமின்மை,விட்டுக் கொடுத்து போவது, கஷ்டங்கள் இருக்கின்ற போதிலும் கலக்கமில்லாமல் சிரிப்பது என ஏராளம்.hostel நாட்களில் ஒவ்வொரு தேர்விற்கு தயார் செய்யும் போதும் என்னை அதிகாலை எழுப்புவது இவர் தான்.அதிகாலை 3 மணிக்கு எழுப்ப சொன்னால் கூட அலாரம் வைத்து எழுந்து வந்து நான்கு ரூம்கள் தள்ளி இருக்கும் என் ரூமிற்கு வந்து என்னை எழுப்பி விட்டு மீண்டும் சென்று உறங்குவாள்.A girl who pays immense value to love.let me take this as one more chance to tel her this.sony,I love you!!
எனக்கு பின்தொடர நான் அழைக்க விரும்புவது
4 comments:
அழைப்பை ஏற்றமைக்கு நன்றி காவ்யா... :)
இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவுஅழகா தொகுத்து எழுதியிருப்பது வியக்க வைத்தது...
இதுவரைக்கும் உங்க புனைவுகளைத்தான் படித்திருக்கிறேன்... கட்டுரைகளும் எழுதுங்களேன் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... :)
பாரதியின் செல்லம்மா, ஊர்மிளை, கிம்கிளிஸ்டர்ஸ் - ஹ்ம்ம்ம்ம் பெண்களின் பார்வை நுட்பமானது என்று மீண்டுமொருமுறை ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன் :)
உங்கள் தோழியைக் குறிப்பிட்டிருந்தது நெகிழ்ச்சி....
பர்க்காதத் - நிச்சியம் குறிப்பிடத்தக்க ஒரு மீடியா பெண் என்பதில் ஐயமில்லை...
அருந்ததிராய் - //இயல்பாகவே முற்போக்கு சிந்தனைவாதி// உண்மை!!
சாண்ட்ரா பாலக் - அட.. உங்களுக்கும் பிடிக்குமா!! ஸ்பீட்ல இருந்தே எனக்கு சான்ட்ராவை ரொம்பப் பிடிக்கும்
ஆசிரியைகள் வணக்கத்துக்குரியவர்கள் :)
எனக்கு சானியாவைப் பிடிக்காது... செய்னாவைக் கவனித்தது இல்லை.... கவ்னிக்கிறேன்...
சூப்பர்பா எழுதியிருக்கீங்க காவ்யா.... மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)
அழைப்பிற்கு நன்றி.. நிச்சயம் எழுதுகிறேன்..
Realy gud selection.
few of them r in my fav'list too...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment