ஒரு முறையேனும்
உன் சோகத்தை பகிர்வாய் என்றே
ஒவ்வொருமுறை நீ கலங்கும் போதும் கேட்கிறேன்
"என்னவாயிற்று?" என்று
நீயோ முகம் திருப்பி
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டு
"எல்லாம் நலம்"
என கண்கள் மின்ன புன்னகைக்கிறாய்
உன்னோடு சேர்ந்து
பார்க்கின்ற நிலா அழகு என்பதாலேயே சொல்கிறேன்
"இன்றைய நிலா ரம்மியம் " என்று
நீயோ "உன்னை மட்டுமே ரசிக்கிறேன் நான்
என்னைத் தவிர எல்லாவற்றையும் ரசிக்கிறாய் நீ" என
சின்னக் கோபம் பூக்கிறாய்
பசும்புல் வெளிகளில் விழும்
மழை சாரல்களும் நீயும் வேண்டும் என்கிறேன் நான்
அக்கறையாய் எனக்கென்று ஒரு குடையோடு
உடன் வருகிறாய் நீ
உன் பிறந்த நாளுக்கான பரிசினை
ரகசியமாய் யோசிக்கிறேன் நான்
நீயோ அப்பட்டமாய் கேட்டு விடுகிறாய்
இந்த பிறந்த நாளிற்கு என்ன வேண்டும் என்று
இப்படி
என் சின்ன சின்ன கவிதைகளை
நீ சிதறடிக்கிற போதும்
வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும்
அப்பாற்பட்டது உன் நேசம்
என்பதால்
இன்னும் உயிர்ப்புடனே இருக்கிறது
என் காதல் கவிதை!!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
superb esh... unakku vara pora lover koduthu vachavan esh... Keep rocking........
அழகான வரிகள்
கவிதை அழகு... ரசித்தேன்...தொடருங்கள்....
க்ளாஸ்...ரொம்ப நல்லாருக்கு...
சில பிரியங்கள் அப்படித்தான் தடாலடியா இருக்கும் ..:) ஆனா பூச்சுகளில்லாத உண்மையான நேசம் அதுதான். :)
நீயோ அப்பட்டமாய் கேட்டு விடுகிறாய்
இந்த பிறந்த நாளிற்கு என்ன வேண்டும் என்று
இதுதான் உண்மையான காதல்..
பசும்புல் வெளிகளில் விழும்
மழை சாரல்களும் நீயும் வேண்டும் என்கிறேன் நான்
அக்கறையாய் எனக்கென்று ஒரு குடையோடு
உடன் வருகிறாய் நீ ""
entha varigal...
m..algana varigal..
"உன்னை மட்டுமே ரசிக்கிறேன் நான்
என்னைத் தவிர எல்லாவற்றையும் ரசிக்கிறாய் நீ"
padichutu oru meliya punnagai vanthathu marukamudiathu..
Kavithiulum Nagichuvai..aglathan erukirathu..
Valgavalamudan..
v.v.s group
Good lines Darls..
வாசித்தவர்கள் அனைவருக்கும் நன்றி
Post a Comment