Friday, January 8, 2010

நண்பர்கள்!!

வண்ண மலர்களின் வாசமும்
பறவைகளின் நாதமும்
வீசுகின்றன இளம் தென்றலும்
காலை வெளிச்சத்தில்  கரைந்து கொண்டிருக்கும்
சோடியம் விளக்குகளும் ...
உறக்கத்தையும் கனவுகளையும்
போர்வையோடு மடித்து வைக்கின்றன மனிதர்களும்
காலைக்கே உள்ள ஸ்பரிசமும்
அழகாக்குகின்றன நாளின் தொடக்கத்தை...
அப்படியே,
மென்மையான அன்பும் 
உரிமையோடு பாசமும்
விளக்க இயலாத நேசமும்
உணர்வோடு பின்னிபோகின்றன நெருக்கமும்
நடுக்கத்தில் கைக்குள் நுழைகின்றன ஐவிரல்களும்
'இதெல்லாம் ஒரு மேட்டர் னு பீல் பண்ற பாத்தியா?"
ஆறுதல் வார்த்தைகளும்
குறும்புச் சிரிப்புகளும்
கேலிப் பேச்சுகளும்.....
கடவுளின் வரங்களாய்
வாழ்வை அழகாக்கி செல்கிறார்கள்
நண்பர்கள்!!

9 comments:

அகல்விளக்கு said...

நட்பின் வர்ணிப்பு அருமை....

அழகான கவிதை...

வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை...

அண்ணாமலையான் said...

கதை முடிஞ்சு கவிதையா? ம் நடத்துங்க...

angel said...

kavithai kavithai kavithai


whn is the next story?

ரிஷபன் said...

வாழ்வை அழகாக்கி விட்டது இந்தக் கவிதையும்..

Mohan R said...

Hmmm nalla irukku Enakku mudhal pathi romba pidichurukku

காலை வெளிச்சத்தில் கரைந்து கொண்டிருக்கும்
சோடியம் விளக்குகளும் ...
உறக்கத்தையும் கனவுகளையும்
போர்வையோடு மடித்து வைக்கின்றன மனிதர்களும்

Nice lines

'இதெல்லாம் ஒரு மேட்டர் னு பீல் பண்ற பாத்தியா?"

Hmmm college timela neriya ketta varthaigal Unmai thaanla Andha timela ethuvume periya mattera theriyadhu

Nice kavidhai

Sorry story padikala Andha film yerkanave parthutten So yeno padikanumnu thonala But pudhu story sikiram podunga

Mohan R said...

NANDRI

Manadhai thottavaila 2nd time ennoda kavidhai pottadhukku :)

Priya said...

Nice...keep writing!

kavya said...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி