Wednesday, January 6, 2010

மே மாதம்(6)

......-6...  ராகுல் வந்து விட்டு சென்று 5 நாட்கள் ஆகிறது.அதன் பின் எந்த தகவலும் அவனிடத்தில் இருந்து இல்லை.மலர் மனதில் புயல் வீசிக் கொண்டிருந்தது. முன்பு போல் தன மனதை ஒரு முடிவு நோக்கி அவள் செலுத்தவில்லை...நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மனதில் ஓடி கொண்டிருந்தன.திடீரென பெங்களூரில் கிடைத்த கார்த்திக்கின் நட்பு...எப்பொழுதும் இவளை அழ வைத்து கொண்டிருக்கும் ராகுல்....தானாய் ஒரு முடிவுக்கு அவள் மனம் சென்றது.ராகுலைப் பார்க்க வேண்டும்.அவன் கண் பார்க்கும் நேரத்தில் மனதில் தோன்றுகிற அத்தனை கேள்விகளையும் அவனிடத்திலே கேட்டு விட வேண்டும்.வேக வேகமாக கிளம்பினாள்.போகிற வழியில் அவனை போனில் அழைத்தால்."எங்க இருக்க..?""என் flat  பக்கத்துல இருக்ற பார்க் ல இருக்கேன். என்ன  விஷயம் மலர்....?".."உன்ன பாக்கணும்.." இது மலர்."சரி ஒரு 1 அவர் ல வரேன் ..." என்றான் அவன்.இதை கேட்கும் பொழுதே மலர் அவன் வீட்டை நெருங்கி இருந்தாள்.அடுத்த 5 நிமிடத்தில் அவன் சொன்ன பார்க்கை அடைந்து அங்கு இருந்த அவனயும் பார்த்து விட்டாள்.
          அங்கு அவன் மாத்திரம் இல்லை.அவனோடு ப்ரீத்தியும் இருந்தாள்.இவளை பார்த்த மாத்திரத்தில் அவன் வேக வேகமாய் பேச தொடங்கினான்."மலர்..அன்னிக்கு ஒரு சண்ட..ரொம்ப வெக்ஸ் ஆய்ட்டேன்..அதான் உன் வீட்டுக்கு வந்து ஏதேதோ பேசிட்டேன்...ஒன்னும் மனசுல வச்சுக்காத.உணர்ச்சிவசப்பட்டு பேசினது எல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது...." அவன் கண்களில் மின்னிய குற்ற உணர்ச்சியை அவள் பார்த்தாள்.அவள் சமாதானம் அடைய வில்லை என்பது ராகுலுக்கு தெரிந்தது.விடு விடுவென்று அவளை 4 அடி தள்ளி அழைத்து சென்றான்."மலர் எப்பவோ orkut ல பேசினது எதுக்கும் இப்போ அர்த்தம் இல்ல..அதெல்லாம் சும்மா...ஆனாலும்...ஐயோ உனக்கு எப்படி புரிய வைக்கிறது...உன்னோட இந்த கண்களை எப்பவுமே என்னால மறக்க முடியாது....ஆனா..." விளையாட்டுகளில் ஒரு வீரர் காயம் பட்டால் இன்னொருவரை substitue ஆக வைத்திருப்பது போல..இவனது காதல் ஆட்டத்தில் நான்..மலருக்கு நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.பாதியில் அவனை நிறுத்திய அவள்தன் மனதில் பட்டதைக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாள் கார்த்திக்கின் வீட்டிற்கு.
        நடந்தவை அனைத்தையும் நிதானமாய் கேட்ட அவன்..நீங்க என்ன மலர் பதில் சொன்னிங்க என்றான்...
"போதும்...உன் வாழ்க்கைல எந்த மனித உணர்வுகளுக்கும் அர்த்தம் இல்ல...என் மனசுல இருந்து நீ போய் ரொம்ப நாள் ஆகுது.இன்னொருமுறை எதுக்காகவும் என்கிட்டே வராதே ..." ."எப்பிடி மலர் சொன்னீங்க.. இதை சொல்ல முடியாம தான இத்தன நாளா தவிச்சீங்க..".."ஆமா கார்த்திக்... என்னால எந்த தயக்கமும் இல்லாம சொல்ல முடிஞ்சது.. ஏன்னா உங்க அன்பை நான் தெளிவா புரிஞ்சுகிட்டதால...என்னோட தயக்கத்தால இது வரைக்கும் என் வாழ்க்கைல எத்தனையோ இழந்து இருக்கேன்.நான் விரும்பின படிப்பு..வாழ்க்கைனு எவ்வளவோ...ஆனா இன்னிக்கு என் தயக்கத்த உதறி தள்ளிட்டு கேக்றேன்...உணர்ச்சி வசபடல.. தெளிவா இருக்கேன்..உங்க அம்மாவோட திருச்சிக்கு வருவீங்களா...என்னை உங்க கூட மறுபடியும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்களா... உங்க கைய கோர்த்துகிட்டு மிச்சமிருக்கிற பாதைய கடக்கணும்ஆசைபடறேன் ..." அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.அவள் வாழ்க்கையை நிறைத்திருந்த ஏமாற்றம் இரு துளி கண்ணீராக கண்களில் இருந்து கன்னத்தில் வழிய,தன் முதல் விரலால் அதைத் துடைத்து எறிந்தான் கார்த்திக்.
          "எப்பிடி இத்தன நாள் போச்சுனே தெரியல மா... " ராமின் அம்மாவிடம் சொன்னாள் ஸ்வாஷிக்கா.."ஆமாம்மா...பேசாம நீ எங்க கூடவே இருந்துடு.... " சூசகமாய்..சுலபமாய் தன் மனதை சொல்லி விட்டாள் ராமின் தாய்.இங்கேயே இருந்து விட அவளுக்கும் ஆசை தான்.ஆனால் எப்படி இருக்க முடியும்.விவாகரத்து பெற்றவள் இவள்.ராமின் குடும்பச் சூழலோ முற்றிலும் வேறு பட்டது.ராமிற்கும் இந்த எண்ணம் தான்.அனால் எப்படி ஸ்வாஷிக்காவிடம் கேட்பது.அவள் வசதியானவள்.அவளது வாழ்க்கை முறை வேறு.என்னை மட்டும்மில்லை என் குடும்பத்தையும் அவள் ஏற்க வேண்டும்.பெரிய பாரத்தை ஏற்றுக் கொள் என்று எப்படி அவளிடம் கேட்பது.இப்படி தயக்கத்திலே நாட்கள் கழிய அவள் கிளம்புகின்ற நாளும் வந்து விட்டது.
          மூட்டை முடிச்சுகளுடன் அவளை பார்த்த ராமிற்கு திக்கென்று இருந்தது.அவளுக்கோ உயிரை இங்கு விட்டு செல்வது போல் இருந்தது.அவள் இழக்க போவது ராமை மட்டும் அல்ல.ஒரு அழகிய குடும்பத்தை.வெளியில்  டாக்ஸி வந்து நிற்க...இவள் பையை தூக்கிய உடன் ராமிற்கு யாரோ விருட்டேன்று இதயத்தை பிடிங்கியது போலிருந்தது.பட்டென்று ,"நீ போய் தான் ஆகணுமா ஸ்வாஷிகா... இங்க... என்கூட ..எங்க கூடவே...இருந்துடு...உன்ன பாத்துக்கிற நான் இங்க இருக்கும் போது,இந்த குடும்பத்த விட்டுட்டு  நீ எதுக்கு தனியா அங்க... " என்னோடு உன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு என் குட்ம்பத்தொடு இங்கேயே தங்கி விடு என்கிற கனமான அர்த்தம் கொண்ட வார்த்தைகளை 5 நொடிகளில் சொல்லி விட்டான் ராம்."இத்தனை நாள் என் வாழ்க்கை முழுதும் நிறைந்திருந்த தனிமை,பாதுகாப்பற்ற சூழல் அத்தனையும் மறைந்து அன்பு நிறைந்த ஒரு அழகான குடும்பம் எனக்கு கிடைக்கபோகிறது.மனம் முழுக்க நேசத்தை மட்டும் ஏந்திக் கொண்டு என்னை ஏற்றுக் கொள் என்று என் முன் ஒருவன் நிற்கிறான்..." அந்த நொடிகள் கனமானவையாக பட்டது அவளுக்கு.கடவுள் கண் முன் வந்து விட்டார்.அவனுடைய வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும், தன் வாழ்க்கையை அவை எப்படி மாற்றிப் போகும் என்பதையும் முழுதும் உணர இயலாத ஒரு பரவச நிலையில் இருந்தாள்.விடுவென்று திரும்பி காரில் ஏறி அமர அவள் அமர...கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ஊற்றியது.ஒரு துளிக் கண்ணீர் வர வேணுமென்று பல இரவுகள் அவள் போராடியது உண்டு.கண்ணீரைத் தொட்டு பார்த்துக் கொண்டாள்.புல்லரித்தது.தன் பெண்மையை முதல் முறையாக ஆத்மார்த்தமாக உணர்ந்தாள்.அது என் குடும்பம்.காரைத் திருப்பும்படி சொன்னள்.வீட்டிற்கு வந்து ,கலங்கிய கண்களோடு அங்கேயே நின்று கொண்டிருந்த ராமின் தோள்களைக் கட்டிகொண்டாள்.
          முடிந்தது மே மாதம்.ஜூன் மாதம் தொடக்கி விட்டது.பெங்களூரில் ஒரு பள்ளியின் வாசலில் மலரை கார்த்திக் தன் பைக்கில் இருந்து இறக்கி விட,"மறக்காம அத்தைக்கு pressure மாத்திரை வாங்கிட்டு  போங்க... டேபிள் ல உங்களுக்கு டிபன் பாக்ஸ் இருக்கு.மறக்காம எடுத்துகிட்டு போங்க..." ஞாபகப்படுத்தி விட்டு பள்ளியை நோக்கி மலர் விரைய,திருச்சியில்  ஸ்வாஷிக்கா,சிறிய அளவில் தன் கிராபிக்ஸ் கம்பனியை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தாள்.

-(முற்றும்) .... அவ்ளோதாங்க!

6 comments:

அண்ணாமலையான் said...

ம்ம்ம்...அடுத்தது என்ன?

angel said...

very nice and your way of presentation too rocks. keep writing stories

Anonymous said...

av女優貼圖區av女優短片av女優短片免費av女優短片免費看av女優短片欣賞av女優網av女優線上av女優線上直播av女優線上電影av女優線上免費色情影片av女優線上分享av女優美國av女優遊戲av女優遊戲區av女優自拍片av女優色情影片av女優視訊聊天室av女優動漫av遊戲區av貼片av貼片網av貼片區av貼片排行榜av貼圖av貼圖免費影片av貼圖區av辣妹av辣妹影片avhelloavhello密碼avhiavhighavhighc2009avhighallrightsavhotnetavi視訊播放av試看av視訊短片av裸體寫真av自拍av自拍無碼免費看

ரிஷபன் said...

கதை மிக மிக விறுவிறுப்பு.. நீண்ட கதையாக இதுதான் உங்கள் முதல் முயற்சி என்று நினைக்கிறேன். முதல் சவாலே வெற்றி.. தொடரட்டும்..எழுத்து சாதனைகள்..

kavya said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி angel,
@ரிஷபன்----நீண்ட கதையாக இதுவே என் முதல் முயற்சி.கருத்துக்களுக்கு நன்றி
@அண்ணாமலையார் ---அடுத்த இடுகையும் போட்டாச்சு..
படிச்சுட்டு சொல்லுங்க ..

ruby said...

nice story di... malar part than remba pidichuchathu. realistic. anubavichu padichen. karthik character um pidichathu. y so spl in it????