...(5 )... ராகுலிடம் தெளிவாய் பேசிவிட தன்னை தயார் படுத்திக்கொண்டாள் மலர்.தனக்குள் கசப்புணர்வுகள் எல்லாம் மறையட்டும் என காத்திருந்தாள்.ஒரு வார இடைவேளையில் கார்த்திக் அவளுக்கு நெருங்கிய தோழனாகிப் போயிருந்தான்.பத்திரிகை செய்தியில் ஆரம்பித்து ஆழ் மனப்ரச்சனைகள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருந்தது அவர்கள் உறவு.வாழ்வில் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு அணுகுமுறை கொண்ட இருவரும் ஒரு உறவில் இணையும் போது முரண்பாடுகள் எழுவது சஹஜம் .அனால் ஒருவரின் அணுகுமுறையை இன்னொருவர் ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த உறவு இனிக்க ஆரம்பிக்கும்.அதுவே நிகழ்ந்தது மலருக்கும் கார்த்திக்கும் இடையில்.... ராகுல் மீதான காதலை சொல்லிய நாளில் ஆரம்பித்தே கார்த்திக் மலர் மீதான தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.மலருக்கு தான் ஏனோ,'அன்றைய காலையில்' தன்னுடைய பதில் வேறு மாதிரியாக இருந்திருந்தால் தன வாழ்க்கை இன்னும் இனிமையாய் போய் இருக்குமோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து மறைந்து கொண்டிருந்தது. கார்த்திக் அவள் மன எல்லை கதவுகளை உடைத்து வேகமாய் முன்னேரிக்கொண்டிருப்பதையும் அவள் அறியாமல் இல்லை.
அன்றைய நாள் விடிந்த பொழுது எப்பொழுதும் போல் தான் இருந்தது.மாலையில் ராகுல் மலரை சந்திக்க வரும் வரையில்...மலரை பார்க்க வந்த அவன் ஒரு மணி நேரம் ஆகியும் எதுவும் பேசவில்லை.முகம் இருகி இருந்தது.தன் முகத்தைக் காட்டாமல் திரும்பி அமர்ந்து இருந்தான்.மலரை இங்கு சந்தித்த நாள் முதல் அவளாய் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.மற்றுமொரு ஐந்து நிமிடம் கழிந்த பிறகு தன் நம்பிக்கையைத் திரட்டிக் கொண்டாள்.இருந்தும் பேச தைரியம் வரவில்லை.ஒரு நிமிடம் கண்களை மூடி கார்த்திக்கை நினைத்துக் கொண்டாள்.அவன் இருந்தால் எப்படி இதை எதிர் கொண்டிருப்பான்.. யோசித்தாள்.உள்ளிருந்து ஏதோ ஒரு உணர்வு உந்தித் தள்ள ராகுல் அருகில் சென்றாள்.மெல்லிய குரலில் "என்ன ஆச்சு...ஏன் இப்படி...." அவள் முடிப்பதற்குள் திரும்பிய அவன் கண்கள் சிவந்து போய் இருந்தன.அதை பார்த்த மாத்திரத்தில் இவள் வார்த்தைகளற்று போனாள்.சற்றென்று இவள் கைகளை பற்றிக் கொண்ட அவன்,அவளது உள்ளங்கையில் முகத்தை புதைத்துக் கொண்டான்."என்னை வேணாம்னு சொல்லிட்டா மலர்..அவ முன்னாடி நாம வாழ்ந்து காட்டனும்...".அவன் தலையை மென்மையாய்க் கோதினாள்.தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டு விலகினாள்.அவள் மனம் எண்ணங்கள் ஏதுமின்றி வெறுமையாய் இருந்தது.
மறு நாள் நடந்தவற்றை சொல்ல கார்த்திக் மௌனமாய் அமர்ந்து இருந்தான்."அவன் கிட்ட என் காதலை சொல்ல நேரம் பார்த்துகிட்டு இருந்தேன்.இப்போ நடக்கிறதா இருந்தா அவன் கல்யாணம் நின்னு போச்சு.எனக்கு சாதகமா தான் இது எல்லாம் நடக்கிற மாதிரி தெரிஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு பாரு கார்த்திக்....கொஞ்ச மாசத்துக்கு முன்ன எங்களுக்குள்ள இருந்த காதலையோ இல்ல அவன் என்ன விட்டுட்டு போன பிறகு நான் பட்ட கஷ்டத்தையோ ஒரு வார்த்தைல கூட அவன் இது வரைக்கும் அங்கீகரிச்சது இல்ல... இப்போ வரைக்கும் நான் என்ன நினைக்கிறேன்னு ஒரு வார்த்தை கூட கேட்டது இல்லை...ஆனா எப்டி அந்த 'நாம' ங்கற வார்த்தை முளைச்சதுன்னு எனக்கு புரியல..... அவன் மேல இருந்த பிடிப்பு மொத்தமா விட்டுப் போன மாதிரி இருக்கு.இவன் கூட வாழனும்கிற ஆசை எல்லாம் போய் ரொம்ப நாள் ஆகுது.இருந்தாலும் ஏதோ ஒன்னு உறுத்திக் கிட்டே இருக்கு...." மெதுவாய் தெளிவாய் அவள் சொல்லி முடித்தாள். "சரி தான் மலர்.. விருப்போ வெறுப்போ அவர் மூஞ்சிக்கு நேர அத பத்தி நாலு வார்த்த பேசிட்டு வாங்க...அப்போ தான் அந்த உறுத்தல் குறையும்....." சிம்பிளாக ஒரு வரியில் முடித்து விட்டான் அவன்.பின் எழுந்து கிளம்புகையில் போகிற போக்கில் சொல்லி விட்டு போனான்..."அவரு ரொம்ப unlucky ங்க..."

இது இப்படி இருக்க,அங்கே ஸ்வாஷிக்காவோ ராமின் குடும்பத்தோடு இரண்டறக் கலந்திருந்தாள்.காதல் போன்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு இருவருமே எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள்.தனிப்பட்ட வாழ்வில் ஒரு முழு வட்டத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டவர்கள்.அதனால் தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பது புரிந்திருந்தாலும்,இவை அனைத்திற்கும் ஆயுள் 3 வாரங்கள் என்பதையும்,அதற்கு பின் உள்ள தங்கள் வாழ்க்கை முற்றிலும் வேறானது என்பதையும் அறிந்திருந்தார்கள்.எனவே நாளை குறித்து அவர்கள் பெரிதும் கவலை கொள்ளவில்லை....
-தொடரும் (pls pls bear... will be concluded in the next part :) )
5 comments:
நெசமாலுமே முடிஞ்சுடுமா?
saththiyamaa annamalaiyaare...!! ;)
mudinjiduma? so sad!
write some more stories pls
also thank u for posting soon
முடிவா? அதற்குள்ளா? சரி.. என்னதான் சொல்லி முடிப்பீர்கள் என்று பார்க்கலாம்..
முடிவு எப்படி இருக்கும்? ஆவலாக இருக்குங்க.
Post a Comment