Monday, January 4, 2010

மே மாதம்(4 )

...(4 ) மலர் முகத்தில் காட்டிய இறுக்கமோ  அல்லது வார்த்தையில் காட்டிய சுருக்கமோ கார்த்திக்கை சிறிதும் பாதிக்கவில்லை...ரொம்பவே இயல்பாய் .."ஓ...டீச்சரம்மாவா... சரி சரி..." என்று  புன்னகைத்தவன் வந்து அமர்ந்து கொண்டது வீட்டின் வரவேற்பறையின் சோபாவில்....சட்டென்று எதையும் பேசி பழக்கம் இல்லாத மலருக்கு இவன் கொடுப்பது இம்சையாக பட்டது.எப்போது போவானோ என்று அவள் யோசிக்கையிலேயே அடுத்த குண்டை அவன் வீசினான்."ஊர்ல அம்மா எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க...உங்களை எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு...உங்களுக்கும் ஓகே னா அம்மாவ கூட்டிட்டு நான் திருச்சி வரேன்" .அவன் ஒரு முழு பைத்தியம் என்றே அவளுக்கு பட்டது.அவன் கேட்டது அபத்தத்திலும் அபத்தம் என்று தோன்றியது."ஹலோ..என்னங்க விட்டா பேசிகிட்டே போவீங்க போல..முதல் முறையா பாக்குற ஒரு பொண்ணுகிட்ட  இப்டிதான் பேசுவீங்களா?ஸ்வாஷிக்காவோட பிரென்டுன்னு பாத்தா... உங்க லிமிட் தாண்டி  நடந்துகிறீங்க....இந்த ஊர்ல நீங்க பாக்குற பொண்ணுங்க மாதிரி இல்ல நான்...இந்த இடத்த விட்டு முதல்ல போங்க...".சட்டென்று எழுந்து செல்வான் என்று நினைத்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது."என்னங்க..ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது.கூல் கூல்...எனக்கு பிடிச்சுருக்கு.உங்களுக்கு புடிச்சிருக்கான்னு தான கேட்டேன்.தப்பா ஒன்னும் behave பண்ணலையே..." என்று ஒரு நிமிடம் நிறுத்தினான்.சற்றே பயம் வந்து விட்டது மலருக்கு.இப்பொழுது அவனும் சற்று உணர்ச்சி வசப்பட்டவன் போல் தோன்றினான்."மென்மையான உணர்வுகளுக்கு இந்த ஊர்ல இடம் இல்லங்க..மண் வாசத்தோட  இருக்ற உங்கள பாத்த உடனே என்னோட அம்மா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க...ரொம்ப மனசுக்கு நெருக்கமா பட்டீங்க...அதனால கேட்டுட்டேன்...சரி விடுங்க...நடந்த எதையும் தப்பா எடுத்துக்காதீங்க... sorry" என்றவன் விடு விடுவென நடந்து வாசலுக்கு வந்தான்.செல்வதற்கு முன் திரும்பி "உங்கள பாத்தா ஏதோ ரொம்ப confusion ல இருகறாப்ல இருக்கு...take life easy.." என்று சொல்லி விட்டு காரில் ஏறி கிளம்பி விட்டான்.என்ன நடந்தது என்று யோசிப்பதற்கே மலருக்கு அரை நாள் தேவை பட்டது.வாழ்க்கையை எத்தை சுலபமாக வாழ்கிறான்.அவன் சொல்ற மாதிரி நான் தான் எல்லாத்தையும் complicate பண்ணிக்கிறேன்.life is easy...ஒரு நிமிடம் மனம் லேசாய் மிதப்பது போல் உணர்ந்தாள்.ஒரு 15 நிமிடத்தில் என்ன மேஜிக் செய்து விட்டான். மனசுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.காலாற வெளியில் நடக்கலாம் என வந்தவளின் கண்ணில் முதலில் தெரிந்தது தெரு முனையில் நின்று கொண்டிருந்த பைக்.வேறு ஒரு பெண்ணோடு அதில் சாய்ந்து நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தது ராகுல்.கண்கள் அகல விரிய அவனை அணுகினாள்.இவளை பார்த்து விட்ட அவன்,போலியாய் புன்னகைத்து ,"மலர்....நீ..நீங்க .. எப்டி இங்க...its a surprise" தோள்களை ஆட்டிக் கொண்டான்."meet my fiancee..." என்று பக்கத்தில் நின்ற பெண்ணை அறிமுகம் செய்தவன்..."நெக்ஸ்ட் ஜனவரில கல்யாணம்.." என்று முடித்தான்.பின் அந்த பெண்ணிடம் மலரை பழய தோழி என அறிமுகம் செய்தான்."எங்க தங்கி இருக்க மலர்...?" :இங்க தான்..என்று மலர் தன் வீட்டை சுட்டிக் காட்டினாள்.அதற்கு மேல் தனக்கு அங்கு ஒன்றும்   வேலை இல்லை என்று உணர்ந்தவள் வெறுமையாய் வீடு நோக்கி நடந்தாள்.
காலிங் பெல் ஓசை கேட்டது.வந்திருந்தது ராகுல்."உன்ன பாத்த உடனே சொல்லணும் நு நெனச்சேன் மலர்..இந்த ஒயிட்  சுடில ரொம்ப அழகா இருக்க."..சுருக்கென்றது மலருக்கு.அவனுக்கான காதல்,கண்ணீர்.... எத்தனை ஆழமானதாய் இருந்தது ..."அப்போ கொஞ்சம் வேலை ல பிஸி... உன்ன மிஸ் பண்ணிட்டேன்...அதுக்குள்ள ப்ரீத்திய பாத்து... பழகி.. engagement வரைக்கும் போய்டுச்சு...இப்பவும் கூட சொல்றேன் நீ எனக்கு special தான்..." இன்னும் ஏதேதோ பேசினான்.எத்தனை சுலபமாய் அவனால் பேச முடிகிறது.நீ எப்படி வேண்டுமானாலும் போ.. என் வாழ்க்கையில் இனிமேல் வராதே...இந்த வார்த்தைகளை அவனிடம் சொல்ல வேண்டும்.தொண்டையை காதல் அடைத்துக் கொண்டது.சொல்ல முடியவில்லை.அவனோ பேச்சின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தான்."தனியா இருக்க..safe ஆ இருந்துக்கோ...சிட்டி ரொம்ப மோசம்.என்ன ஹெல்ப் நாலும் எனக்கு கால் பண்ணு..." வரட்டுமா...?..தலை அசைத்தாள்.தலை சுற்றியது.சோபாவில் சாய்ந்து கொண்டாள்.பழய ஞாபகங்கள் நெருடின.எதிரே இருந்த டீபாயில் சின்னதாய் அழகாய் ஒரு புத்தகம்.தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட புத்தகம்.முதலில் அவள் மனதில் பதிந்த பெயர்...கார்த்திக்.எண்களைத் தடடினாள்.மறுமுனையில் அவன்."சொல்லுங்க மலர்" என்றான்."sorry... காலைல ஏதேதோ பேசிட்டேன்.ஈவிநின்க் உங்கள பாக்க முடியுமா..." "ஒ எஸ்..ஏழு மணிக்கு நானே வர்றேன் மலர்"...சொன்ன படியே வந்தான்.இப்பொழுது அவன் புன்னகையில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிநேகம் தெரிந்தது...ரொம்பவே எச்சரிக்கையாய் பேசினாள் மலர்."கல்யாணம் பத்தி எல்லாம் இன்னும் நான்  யோசிக்கல கார்த்திக்.நீங்க எனக்கு நல்ல பிரெண்டா இருப்பீங்கன்னு தோனுச்சு.." அவன் பதிலுக்காக நிறுத்தினாள்.புரிந்து கொண்டவனாய் "ஒ...நட்புக்கரம் மட்டும் தான் நீட்ட முடியும் நு சொல்றீங்க.ஓகே..லெட்ஸ் பி குட் பிரென்ஸ்...."
பாதி பாரம் குறைந்தது போல் இருந்தது அவளுக்கு....தன் வாழ்க்கையில் நடந்தவை  மொத்தத்தையும் சொல்லி முடித்தாள்.இப்ப நான் என்ன செஞ்சா கரெக்ட்...குழந்தையை போல் கேட்டாள்.வலியில்லாமல் ராகுலை  பிரியும்  வழியை சொல்வான் என்று நினைத்தாள் மலர்.கார்த்திக் தொடர்ந்தான்.."மலர்.. அடிப்படைல நீங்க ரொம்ப கன்சர்வடிவ்..எதையும் யோசிச்சு செய்ற ஆளு..ஆனா எந்த அடிப்படைல எனக்கு கால் பண்ணீங்க..உங்க கதை முழுசையும் சொன்னீங்க..சரியா சொல்லனும்னா நீங்க எடுத்த இந்த முடிவு  தப்பா கூட போய் முடியலாம்..நீங்க அது பத்தி யோசிக்கல..உணர்சிவசத்துல எனக்கு கால் பண்ணிடீங்க..ஆனா பயபடாதீங்க..நான் அந்த அளவுக்கு வில்லன் இல்ல..இத ஏன் சொல்ல வரேன்னா உணர்ச்சிவசப்பட்டு நீங்க எடுக்ற முடிவுகள் தப்பா போகலாம்.இப்ப கூட பாருங்க...அவர   நீங்க எவ்ளவோ திட்னீங்க..இருந்தாலும் வெளில போ நு அவர பாத்து உங்களால சொல்ல முடியல.ஏன்னா இன்னமும் நீங்க அவரை விரும்புறீங்க..பிள்ளை எப்படி இருந்தாலும் நேசிக்கிற தாய் மாதிரி தூய்மையான நேசம் உங்களோடது.இல்லன்னு சொல்லி நீங்களே உங்கள ஏமாத்துக்காதீங்க....நான் சொன்னதநல்லா யோசிச்சு பாருங்க.சரின்னு தோணுச்சுனா அவர நேர்ல பாத்து உங்க காதல மறுபடியும் சொல்லுங்க...உங்களுக்கும் அவருக்கும் இடைல இருக்கிறது என்ன மாதிரியான relationship னு அவரையே சொல்ல வைங்க.தெளிவான ஒரு பதில அவரு கொடுத்தே ஆகணும்கிற கட்டாயத்த உண்டு பண்ணுங்க.அவரு போலியா இருக்காரு அது இதுன்னு கண்டதையும் யோசிக்காதீங்க..உண்மையான அன்பு எல்லாத்தையும் வாழ வைக்கும்...உங்க அளவுல நீங்க உண்மையா இருங்க".கடிகாரம் நேரம் பத்து என அறிவித்தது".நான் கிளம்பட்டுமா...?".. "ம்ம்ம்...சரி..."
ஏன்னா இன்னமும் நீங்க அவரை விரும்புறீங்க..பிள்ளை எப்படி இருந்தாலும் நேசிக்கிற தாய் மாதிரி தூய்மையான நேசம் உங்களோடது. ஆம்.என்ன என்று தெரியாமல் தொண்டையை அடைத்துக்  கொண்டிருந்தது இது தான்.நன்றி கார்த்திக்.... ஆனால் ராகுலிடம் நாளையே சொல்ல வேண்டும் என்று மலர் நினைக்கவில்லை.நேரம் கூடி வரும்போது சொல்லலாம்."இயல்பாகவே எனக்குள்ள தயக்கங்கள் மறைந்த பின்னே சொல்லலாம்.....இன்று இது நடந்தாக வேண்டும் என்ற திட்டமிட்ட வாழ்க்கை போதும்.எந்த நொடியில் அவனிடம் கேட்க தோன்றுகிறதோ  அந்த நொடியிலே கேட்கலாம்..." தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
-தொடரும்

5 comments:

கவிகவிதன் கவிதைகள் said...

enna alaga eludhuringa ....

padichite irukalam pola irukku.

keep it up...

Vaalthukkal.

angel said...

very nice
oru request varathuku 2 part potrunga okva pls
bye

Prathap Kumar S. said...

நல்லா எழுதுறீங்க... ஆனா பத்தி பத்தியா எழுதப்பழகுங்க... இப்படி ஒரே பாராவா எழுதினா படிக்கிறவங்களுக்கு போரடிச்சு பாதிலேயே போயிடுவாங்க... இது அன்பான அறிவுரையே...

மற்ற சிறந்த வலைபூக்கள், பத்திரிக்கைகளை பார்த்தால் இது உங்களுக்குத்தெரியும்.

ரிஷபன் said...

கதை இயல்பாக வளர்கிறது..

kavya said...

thank u all for the comments...thank u prathap.. for ur suggestions..