Thursday, December 24, 2009

மே மாதம்(3 )

-3 -........ ராம் ஸ்வாஷிக்கவுடன் தங்குவது என முடிவு ஆனா பின் குழந்தைகள் விளையாடுவதற்கு கொஞ்சம் இடம் தேவை என முன்னே ஹாலில் இருந்த சின்ன மர பீரோவை நகற்ற ,ஸ்வாஷிக்கா முயற்சிக்க,ராம் "என்னங்க இதெல்லாம் நீங்க நகத்திக்குட்டு...உங்களால முடியுமா...நல்ல வெயிட்டுங்க .. தள்ளுங்க..."என்றான்.முதல் முறையாக உன்னால் முடியாது உனக்காக நான் செய்கிறேன் என்கிற வார்த்தைகளை கேட்கிறாள்.இது வரையில் அவளுக்கு தேவை படுகிற  ஒரு குண்டூசியை கூட அவளே தான் பெற்று கொள்ள வேண்டும்.இதை எல்லாம் பண்ணா உடம்புக்கு ஒத்துக்காது...பண்ணாதே என்று சொல்லவோ,அந்த நேரத்தில் தனியாய் வெளியே போவது நல்லது இல்லை.. போகாதே..என்று சொல்லவோ அவளுக்கு யாரும் இருந்தது இல்லை.இருந்தவர்களும் சொல்லியதில்லை.ஆனால் ராமிற்கு இயற்கையிலேயே தன்னை சார்ந்து இருப்பவர்களின் மீது அக்கறை கொள்கின்ற   குணம் இருந்தது.இரவு 8   மணிக்கு,அடுத்த நாள் தேவை படுகின்ற ஒரு சோப்போ அல்லது ஷாம்பூவோ வாங்குவதற்கு கடைக்கு செல்கிறேன் என்றால்,"இந்த நேரத்திலே நீங்க போகனுமா..வேண்டாம்.அவசரம்னா குடுங்க நான் வாங்கிட்டு வரேன்" என்பான்.அவனோடு இருந்த அந்த இரண்டு நாட்கள் தன்னை ஒரு இளவரசி போலே நினைக்க வைத்தான் அவன்.இரண்டாம் நாள் இரவு இதைப் பற்றியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.someone who makes you to feel special,becomes special in your life.இந்த வாக்கியத்திற்கு அவன் மட்டுமே அர்த்தமாக பட்டான் அவளுக்கு.இப்படி நம் மீது அக்கறைப்பட ஒருவர் இருந்தால் தான் சம்பாதிக்கும் பணத்திற்கும் சரி,கிடைக்கின்ற வெற்றிக்கும் சரி ஒரு அர்த்தம் இருக்கும்.ஏன்,வாழுகின்ற வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு.எங்கு வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்கிறது.ராமின் குடும்பத்தை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே அவள் உறங்கிப் போனாள்.ராமின் மீது ஒரு வித அன்போ,நேசமோ ஏற்பட ஸ்வாஷிக்காவால்  காரணம் சொல்ல முடியும்.எப்போதுமே பெண்கள் அப்படித்தான்.எதையும் எடை போடுகின்ற,ஆராய்ந்து பார்க்க கூடிய மனநிலை அவர்களுக்கு உண்டு.calculative என்று கூட சொல்லலாம்.காதலே ஆனாலும் அப்படித்தான்.பொதுவாக ஆண்களுக்குள்ள மனநிலை போலவே ராமிற்கும்.... ஸ்வாஷிக்காவை அவனுக்கு ரொம்பவே பிடித்து போயிற்று.ஏன் என்று எல்லாம் அவனுக்கு தெரியவில்லை.ஏன் என யோசிக்கவும் இல்லை.அடுத்த நாள் காலை ஊருக்கு கிளம்புவதற்கு ஆயத்தாமாகிக் கொண்டிருந்தான் அவன்.உண்மையில்  ஸ்வாஷிக்காவை பிரிகிறோம் என்பதை விட அங்கு அவளைத் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.மலர் இங்கு இருந்த போதும் அப்படித்தான்.ஒரு நாளைக்கு 3 முறையாவது போன் செய்து விடுவான்."சரிங்க.. நாங்க கிளம்பறோம்.." என அவன் சொல்ல .. சற்றும் அவன் எதிர்பார்க்காத ஒன்றை ஸ்வாஷிக்கா அவனிடம் கேட்டாள்."எனக்கு உங்க அம்மா,அப்பா,குடும்பம் எல்லாரையும் பாக்கணும் னு தோணுது.. என்னையும் உங்களோட உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா..".அவன் திகைத்து போய் நின்றான்.அவள் இவ்வாறு கேட்டதில் அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி என்றாலும்,அங்கு அம்மா அப்பா.. என்று யோசிக்கையில் சற்று சிரமம் என்று தோன்றியது.தன் 3 வயது கடைசி மகன்  ஏற்கனவே அவளின் துப்பாட்டாவின் நுனியை பிடித்து கொண்டு தான் நின்றான்.சில நிமிடங்கள் யோசித்த அவன்..."சரி.. நீங்களும் வாங்க..நானே உங்களை கூப்பிட்டு இருக்கணும்.எனக்கு தோணாம போச்சு.நீங்களே கேட்டுட்டீங்க..எங்க அப்பா அம்மா கொஞ்சம் பழைய ரகம்.நீங்க என்னோட மேனேஜர் பொண்ணு.ஊற சுத்தி பாக்க வந்துருக்கீங்கனு தான் சொல்லணும்.மலர் பத்தி வேற கேப்பாங்க...சரி பாத்துக்கலாம்" என்றான்.மூவராய் அந்த கிராமத்திற்கு வந்த ராம் நால்வராய் திருச்சிக்கு பயணப்பட்டான்.
அங்கெ மலருக்கும் வாழ்வில் தென்றல் வீசிக் கொண்டிருந்தது.பெங்களூர் வந்த மூன்றாம் நாள் காலை,வாசலில் ஹாரன் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள் அங்கு பார்த்தது ஒருவனை.மாநிறம்,ஜீன்ஸ் பான்ட் போட்டு இருந்தான்.கருப்பு நிறத்தில் ஒரு டி ஷர்ட்.கண்களில் கருப்பு நிறக் கண்ணாடி என இவள் கண்களுக்கு நன்றாகத் தோன்றினான்.இவளை பார்த்து விட்டு கா முன்னேறி வந்தான்.வந்து நின்று "ஸ்வாஷிக்கா..." என்றான்.இவளோ.."she is not here.she is on a trip to tamil nadu"...என முடிந்த்த வரை குரலை தெளிவாக்கிக் கொண்டு கூறினாள்.அதற்குள் மேலிருந்து கீழ் வரை அவளை பார்த்து விட்டான் இவன்.வெள்ளை நிறத்தில் சுடிதார்.நேர் வகிடு எடுத்து முறையாய் பின்னி இடுப்பிற்கு கீழ் வரை தொங்க விடப் பட்டு இருந்த ஒற்றை பின்னல்,காதுகளில் தொங்கிய தங்கக் கம்மல்.புதிதாய் ,இன்றோ நேற்றோ ட்ரிம் செய்யப்பட்ட புருவம்.பாதங்களுக்கும் ,சுடிதார் பாண்ட்டின் கீழ் பட்டிக்கும் இடையே தெரிந்த கொலுசின் மூன்று முத்துக்கள்...."ஏங்க.. நீங்க தமிழ் நாடா..." என்றான் படு எதார்த்தமாய்.ஏற்கனவே அழகான அவளது கண்கள் இன்னும் விரிந்து ஆச்சர்யத்தில் "ஆமா...எப்டி கண்டு புடிச்சீங்க.." என்றாள்."அட போங்கங்க...இதுக்கெல்லாம் ஜேம்ஸ் பாண்டா  வரணும் ..." என்று சொல்லி சிரித்தவன்."ஓ..ஸ்வாஷிக்காவோட be-new பிரெண்ட் நீங்க தானா.ஹவுஸ் ஸ்வாப் பண்ணிட்டீங்களா...சரி சரி.. நான் அவ கூட வொர்க் பண்றேன்..பேரு கார்த்திக்...நானும் தமிழ் நாடு தான்.ஊரு சென்னை.அவளோட பெஸ்ட் பிரெண்ட்.ஆமா நீங்க?." என சாரா சரவென சொல்லி முடித்தான்.அவனுடைய  வேகத்தில் திணறிப் போன இவள்,தனக்கே உரிய நிதானத்தோடு சொன்னாள்... "மலர்..ஸ்கூல் டீச்சர் ,ஊரு திருச்சி " என சுருக்கமாய் முடித்தாள்.
-தொடரும்

6 comments:

angel said...

me the first

angel said...

very nice will u post tomorrow the cont?

ரிஷபன் said...

முழுசா படிச்சப்புறம் தான் சொல்ல முடியும் போல.. ஆனா ப்ளோ நல்லா இருக்கு.. அது மட்டும் இப்பவே சொல்லலாம்.. அப்புறம் என் பதிவுக்கு உங்க பிளாக்ல விலாசம் கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்.

angel said...

sikram adutha post podunga

ruby said...

hey karthik oda entry sappaya irukku di... olunga nalla character ah kudu.. sariya???

Shree said...

Hey Darls!! 'Holiday inn'